Pages

Friday, December 18, 2009

தெலங்கானா பிரச்னையால் தினசரி 151 கோடி நஷ்டம்

தெலங்கானா தனி மாநில பிரச்னை நீடிப்பதால் ஆந்திர தொழில் துறைக்கு தினமும் சுமார் ரூ.150 கோடி நஷ்டம் ஏற்படுவதாக தெரிய வந்துள்ளது.
ராஷ்டிரிய சமிதி கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ், மேற்கொண்ட போராட் டத்தை அடுத்து தனி தெலங்கானா மாநிலம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு கடந்த வாரம் அறிவித்தது.
ஆனால், ஒன்றுபட்ட ஆந்திராவை பிரிக்கக் கூடாது என்று ஆளும் காங்கிரஸ் உட்பட பல கட்சி எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாநில அமைச்சர்கள் போராட்டத்தில் குதித்தனர். பலர் ராஜினாமா செய்தனர். இதனால், ஆந்திர தலைநகர் ஐதராபாத் உட்பட மாநிலம் முழுவதும் பதட்ட நிலை நீடிக்கிறது. தினமும் பந்த், பேரணி, போராட்டம் என பல்வேறு கட்சிகள் நடத்தி வருவதால் கடந்த ஒரு வாரமாக ஆந்திராவில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டம் நடத்தும் கட்சிகள் ஆதரவைக் காட்ட கடைகளை வற்புறுத்தி மூடுகின்றன. இதனால், ஆந்திராவில் தினமும் ரூ.150 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி ஐதராபாத்தில் மொத்த வர்த்தகர் ஒருவர் கூறுகையில், "தெலங்கானா, ஆந்திரா என இரண்டு பகுதிகளிலும் ஆதரவு, எதிர்ப்பு போராட்டங்கள் நீடிப்பதால் எங்கள் சரக்கு லாரிகள் வழியில் காத்திருக்கின்றன. கடைகள் திறக்கப் படாததால் வர்த்தகம் அடியோடு முடங்கியுள்ளது" என்றார்.
அலுவலகங்களில் ஊழியர்கள் எண்ணிக்கை குறைந்து பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. நீடிக்கும் இந்த போராட்டங்களால் ஆந்திராவில் முதலீடுகள் குறையக்கூடும் என முதல்வர் ரோசய்யா வருத்தம் தெரிவித்தார்.

No comments:

Post a Comment