
கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 101 விமானப் படை பைலட்கள், விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.இந்திய விமானப்படையில் 2002ம் ஆண்டுக்கு பிறகு 500 பைலட்கள் பதவி விலகி, சிவில் விமான போக்குவரத்தில் சேர்ந்துள்ளனர். இதனால், பாதுகாப்பு அமைச்சகம் விருப்ப ஓய்வு பெறுவதில் விதிமுறைகளை கடுமையாக்கி இருக்கிறது. முன்விருப்ப ஓய்வால் மொத்தம் உள்ள 3,278 பைலட்களில் 300 பேர் குறைந்துள்ளது. அரசு ஒவ்வொரு விமானப் படை பைலட்க்கும் பயிற்சி அளிக்க 11 கோடி செலவு செய்கிறது. இந்த தொகை அவர்களது 20 ஆண்டு விமானப்படை சேவையை எதிர்பார்த்து செலவு செய்யப்படுகிறது. ஆனால், பைலட்களோ தங்களது 40 வயது ஆகும் போது பணியில் இருந்து விலகி விடுகின்றனர்.
"ஆறாவது ஊதியக் கமிஷன்படி விமானப்படை பைலட்கள் மாத சம்பளமாக 65,000 முதல் 80,000 ரூபாய் வரை கிடைக்கிறது. அதே நேரத்தில் சிவில் விமான பைலட்கள் மாதச் சம்பளமாக மூன்று லட்ச ரூபாயும் அதற்கு மேலும் எளிதில் பெற்று விடுகின்றனர். "விமானப் படை வீரர்களின் பணி ஒரே இடத்தில் நிரந்தரமாக இருப்பதில்லை. அதனால், அவர்கள் தங்களது குடும்பத்தை நிரந்தரமாக ஒரே இடத்தில் தங்க வைக்கமுடிவதில்லை. "குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுகிறது. இந்த காரணங்களால் பைலட்கள் முக்கியமாக பணி மாறுகின்றனர்' என்று அதிகாரிகள் தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment