போலீஸ் ஸ்டேஷனில் காகித ஆவணங்கள் பயன்பாட்டை தவிர்க்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதன்படி எப்.ஐ.ஆர்., இனி கம்ப்யூட்டர் நகலாக வழங்கப்பட உள்ளது.போலீஸ் ஸ்டேஷன்களில் பதிவாகும் வழக்கு விபரம் முன்னர், காகிதத்தில் எழுதி டி.ஜி.பி.,க்கு அனுப்பப்பட்டது. இவை தற்போது கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு அனுப்பப்படுகின்றன. இதற்காக ஸ்டேஷன்களில் கம்ப்யூட்டர், பிரின்டர், பிராட் பேண்ட் இணைப்பு கொடுக்கப்பட்டது. இவற்றை பதிய "காரஸ்' (சி.ஏ.ஏ.ஆர்.யு.எஸ்.,) சாப்ட்வேர் உருவாக்கப்பட்டுள்ளது.
4.48 லட்சம் வழக்கு பதிவு:இதன்படி மாவட்ட குற்றப்பதிவேடு துறையில் பதிவு செய்யப்படும் விபரங்களை கம்ப்யூட்டரில் பார்க்கலாம். இப்புதிய முறையில் வடக்கு மண்டலத்தில் ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 426, மத்திய மண்டலத்தில் 72 ஆயிரத்து 110, கிழக்கில் ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 999, தெற்கில் ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 856 எப்.ஐ.ஆர்., பதியப்பட்டுள்ளன.முதலிடம்: வழக்கு விபரம் பதியப்படும் முறை குறித்து மாநில அளவில் ஆய்வு நடந்தது.
இதில் சிவகங்கை (12 ஆயிரத்து 157 வழக்கு) முதலிடம், தேனி இரண்டாம் இடம், மதுரை மூன்றாம் இடம், திண்டுக்கல் நான்காம் இடம் பெற்றன.இப்பதிவு முறையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் எப்.ஐ.ஆர்., யையும் கம்ப்யூட்டரில் நகல் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து உயர்மட்ட அளவில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ""விபரங்கள் கம்ப்யூட்டரில் அனுப்பப்படுவதால் ஸ்டேஷன்களில் காகித ஆவணங்கள் பயன்பாடு குறைந்துள்ளது. இதை முற்றிலும் தவிர்க்க எப்.ஐ.ஆர்.,யையும் கம்ப்யூட்டரில் பதிய அரசு முடிவு செய்துள்ளது,'' என்றார்.
Friday, December 18, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment