இது குறித்து அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ராபர்ட் கேட்ஸ் குறிப்பிடுகையில், " இந்தியாவில் எந்தெந்த இடங்களில் தாக்குதல் நடத்த வேண்டும் என்ற தகவல்களை, அல் குவைதா, லஷ்கர் - இ - தொய்பாவுக்கு வழங்குகிறது. இதன் மூலம், இந்தியாவில் பிரச்னையை ஏற்படுத்தி, பாகிஸ்தானுக்கும் தலைவலியை கொடுக்கிறது' என்றார்.
அமெரிக்க ராணுவ பாதுகாப்பு தலைவர் மைக் முல்லன் கூறியதாவது:அல் - குவைதாவுக்கும், லஷ்கர் - இ - தொய்பாவுக்கு நெருங்கிய தொடர்பு உண்டு. இவர்கள் பல நாடுகளில் இணைந்து செயல்படுகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக இவர்களது கூட்டு நடவடிக்கையை கவனித்து வருகிறோம். மும்பைத் தாக்குதலும் இவர்கள் கூட்டு சதியால் தான் அரங்கேறியுள்ளது. இதன் மூலம், இந்திய - பாகிஸ்தான் உறவை இவர்கள் குலைத்து வருகின்றனர். இந்த இரண்டு பயங்கரவாத அமைப்பின் நடவடிக்கைகள் தொடருமானால், பாகிஸ்தானின் ஸ்திரத் தன்மை குலைந்து அணுஆயுதங்களை ஒரு நாள் இவர்கள் கைப்பற்றக்கூடும். இது மிகவும் ஆபத்தானது.இவ்வாறு மைக் முல்லன் கூறினார்.
No comments:
Post a Comment