
மந்திராலயம்:வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மந்திராலயம் ராகவேந்திரா சுவாமி கோவிலின் மறுசீரமைப்பு பணிக்கு, கர்நாடக அரசு 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மந்திராலயம் கோவில் பகுதியில், இரண்டரை கோடி ரூபாய் திட்டத்தில் குடிநீர் திட்டம், ஆறு கோடி ரூபாயில் கோவிலின் சுற்றுப்புற சுவர் எழுப்பும் திட்டம், வெள்ளத்தால் வீடு இழந்தவர்களுக்கு, 175 வீடுகள் இலவசமாக கட்டித்தரும் திட்டங்களின் அடிக்கல் நாட்டு விழாவில், கர்நாடக முதல்வர் எடியூரப்பா நேற்று முன்தினம் கலந்து கொண்டார்.
அவர் கூறுகையில், "வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மந்திராலயம் ராகவேந்திரா சுவாமி கோவிலின் மறுசீரமைப்பு பணிக்கு, கர்நாடக அரசு 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. துங்கபத்ரா நதியின் மீது கட்டப்படவுள்ள புதிய பாலம், விரைவில் கட்டி முடிக்கப்படும். ஆந்திர முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளேன். சுவாமி தரிசனம் செய்வதற்காக மீண்டும் இங்கு வந்தேன்" என்றார்.
No comments:
Post a Comment