Friday, December 4, 2009
ஊட்டி மண் சரிவை படமாக்கிய இதயமில்லா பாவிகள் ?
சங்கீதாவின் தம்பி பரிமள், சந்தியா நடிக்கும் படம் ‘ஓடிப்போலாமா. இப்படம் டிச.25&ந் தேதி வெளிவருகிறது. படம் பற்றி இயக்குனர் கண்மணி கூறியதாவது: வீட்டை விட்டு ஓடிப்போகும் காதலர்களைப் பற்றி படம்தான் ‘ஓடிப்போலாமா. ஆனால் படத்தில் காதலர்கள் ஓடிப்போவதை நியாயப் படுத்தவில்லை. காலம் காலமாக காதலித்து ஓடிப்போனவர்களைப் பற்றிதான் சினிமா வந்திருக்கிறது. முதன் முறையாக ஓடிப்போன காதலர்களுக்கு உதவியாகச் சென்றவர்களைப் பற்றிய கதையிது. தெலுங்கு, தமிழ் இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளிவருகிறது. ‘லேச் போதாமா? என்று தெலுங்கில் பெயர் வைத்திருக்கிறோம். படத்தின் பாடல்கள் ஹிட்டாகியிருக்கிறது. சினேகன் எழுதிய ‘காதலொரு பூச்சாண்டி என்ற பாடல் ஒரிஜினலாகவும், ரீமிக்சாகவும் இடம் பெறுகிறது. ஊட்டியில் சமீபத்தில் மண்சரிவு ஏற்பட்டதைப் போன்று நாங்கள் கிளை மாக்சில் மண்சரிவு காட்சிகளை படமாக்கி உள்ளோம். இவ்வாறு கண்மணி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment