Pages

Saturday, December 19, 2009

ஆண்ட்ரியாதான் காரணம் என்பது தவறான தகவல்

செல்வராகவன், சோனியா அகர்வால் விவாகரத்துக்கு ஆண்ட்ரியா காரணம் என திரையுலகினர் முணு முணுக்கின்றனர். “ஆயிரத்தில் ஒருவன்” படப்பிடிப்பில் ஆண்ட்ரியாவும் செல்வராகவனும் காதல் வயப்பட்டதாகவும் சோனியா அகர்வால் கையும் களவுமாக பிடித்ததால் சண்டை மூண்டு விவாகரத்துக்கு போனதாகவும் கூறுகிறார்கள்.

"சோனியா அகர்வாலும் நானும் பிரிவதற்கு ஆண்ட்ரியாதான் காரணம் என்பது தவறான தகவல். ரொம்ப சந்தோஷமாகத்தான் என் குடும்ப வாழ்க்கை போனது. திருமணத்துக்கு பிறகு சில பொறுப்புகள் வந்தன. அதற்கு தயாராவது முக்கியம். அங்கு தான் பிரச்சினைகள் வந்தன. மாதத்துக்கு ஒன்றிரண்டு வந்தால் சமாளிக்கலாம்.ஆனால் வாரத்துக்கு நாலைந்து வந்தால் என்ன செய்வது. நிம்மதி இழந்தோம். இருவருமே சந்தோஷமாக இருப்பதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்தோம். அதில் ஏற்பட்டதுதான் விவாகரத்து முடிவு.

ஆண்ட்ரியாவால் நாங்கள் பிரியவில்லை. ஆயிரத்தில் ஒருவன் படப்பிடிப்பில் ஆண்ட்ரியா மட்டும் எனக்கு நெருக்கமாகவில்லை. அதில் நடித்த பிற நடிகர்களும் நெருக்கமானார்கள். பிரச்சினைகள் உருவானபோது உட்கார்ந்து பேசி இருந்தால் இவ்வளவு வளர்ந்து இருக்காது.

இந்த விவாகரத்தால் ஆண்ட்ரியா வாழ்க்கை பாழாகி விடக்கூடாது என்று அவருடன் பேசுவதையே நான் நிறுத்தி விட்டேன். இப்போது என் வேலையில் மகிழ்ச்சியை காண்கிறேன்" என்றார் செல்வராகவன் .

No comments:

Post a Comment