
வாங்காத கடனுக்கு வட்டி கேட்டு மிரட்டிய டைனர்ஸ் கிளப் இன்டர்நேஷனல், பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடாக ரூ.50,000 வழங்க வேண்டும் என்று நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை, கிரீம்ஸ் சாலை எம்ஆர்எப் நிறுவன தலைமை இன்ஜினீயர் ஆர்.அசோகன் மயிலாப்பூரில் உள்ள நுகர்வோர் நீதிமன்றத்தில் (தெற்கு) அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
சென்னை, அண்ணாசாலையில் உள்ள டைனர்ஸ் கிளப் இன்டர்நேஷனலில் உறுப்பினராக இருந்தேன். அவர்கள் எந்த தகவலும் தெரிவிக்காமல் ரூ.20,000 மற்றும் ரூ.2 லட்சத்திற்கான காசோலையை அனுப்பி னர். இதற்கிடையில் வாங்கிய தொகைக்கு ரூ.18,391 வட்டிக் கட்ட அறிவுறுத்தினர். இது குறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினேன். அவர்கள் ரூ.26,578 தரும்படி ஏஜெண்ட் மூலம் பயமுறுத்தினர். எனது மன உளச்சலுக்கு இழப்பீடாக அந்நிறுவனம் ரூ.10 லட்சம் தரவேண்டும் என்றார். நுகர்வோர் நீதிமன்ற தலைவர் ரோசைய்யா, உறுப்பினர் மல்லிகா ஆகியோர் விசாரித்தனர். டைனர்ஸ் கிளப் இன்டர்நேஷனல் சேவையில் குறைபாடு உள்ளது. அசோகனுக்கு சம்பந்தப்பட்ட கிளப் இழப்பீடாக ரூ.50,000, வழக்குச் செலவாக ரூ.5,000 வழங்க உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment