Pages

Wednesday, December 2, 2009

நாவல் படித்தால் சிறப்பு மதிப் பெண்


நாவல் படித்தால் சிறப்பு மதிப் பெண் கிடைக்கும் , வியப்பாக இருக் கிறதா...? உண்மை தான். சி.பி. எஸ்.இ., வாரியம் இப்படி ஒரு புதுமையான திட்டத்தை கொண்டு வருகிறது.

மத்திய மேல்நிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.,) மாணவர்கள் பொது அறிவை வளர்த்துக் கொள்ளும் விதம், அவர்களிடம் படிக்கும் பழக்கத்தை தூண்ட இந்த புதிய திட்டத்தை கொண்டு வருகிறது. இதன்படி மாணவர்களை அவர்கள் விரும்பும் நாவல்கள், கதைகள், கட்டுரைகளை நுலகங்களுக்கு சென்று எடுத்து படிக்க தூண்டுகிறது. மாணவர்கள் நுலகங்களுக்கு சென்று நாவல்களை எடுத்து படிக்க அதற்கென்று தனியான பாடவேளைகளை ஒதுக்க பள்ளிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. மாணவர்கள் தங்களுக்கு பிடித்த ஆங்கில எழுத்தாளரின் நாவல்களை எடுத்து படித்து கொள்ளலாம். முழு ஆண்டு தேர்வை ஒட்டி இதற்கென்று தனித்தேர்வு வைத்து மார்க்குகள் வழங்கப்படும்.

ஐந்து முதல் ஏழு வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, எழுத் தாளர்கள் எனிட் பிலிடான், ரோனால்டு தால் நாவல்கள் மற்றும் பஞ்ச தந்திர கதைகளை படிக்கவும், எட்டு மற்றும் ஒன்பதாவது வகுப்பு மாணவர்களுக்கு ஜே.கே. ரொளலிங், ஜூல்ஸ் வெர்ன் கதைகளையும் படிக்க சொல்கிறது. பத்தாவது வகுப்பு மற்றும் அதற்கு மேல் உள்ள மாணவர்களுக்கு அகதா கிறிஸ்டி, சார்லஸ் டிங்கின்ஷன், ஜார்ஜ் ஓர்வல், சத்தியஜித்ரே, ஆர்.கே. நாராயணன் போன்ற எழுத்தாளர்களின் நாவல்களை படிக்க சொல்கிறது. தேர்வு வைத்து இந்த நாவல்களிலிருந்து கேள்வி கேட்கப்படும். இந்த திட்டத்தை அறிமுகப்படுத்த மும்பையில் உள்ள 42 பள்ளிகளுக்கு உத்தரவிட்டுள்ளது

No comments:

Post a Comment