
"கவர்ச்சியைத்தான் ரசிகர்கள் விரும்புகிறார்கள். அதனால் கவர்ச்சியாக நடிப்பதில் எந்த தவறும் இல்லை என்று நடிகை ஹன்சிகா மோத்வானி கூறியுள்ளார். தெலுங்கு திரையுலகில் இருந்து பாலிவுட் பக்கம் போனவர் ஹன்சிகா மோத்வானி. அவர் அளித்துள்ள பேட்டியில், நான் இதுவரை தெலுங்கு, கன்னடம் என இதுவரை 8 படங்களில் நடித்து விட்டேன். இந்தியில் பத்து படங்களில் நடித்திருக்கிறேன். தென்னிந்திய சினிமாவில் பிசியாக இருப்பதால் சில இந்தி வாய்ப்புகளை கூட மறுத்திருக்கிறேன். தெலுங்கில் கவர்ச்சி உடைகளில் நடிப்பது பற்றி கேட்கிறார்கள். கவர்ச்சியாக தெரியவே எல்லா நடிகைகளும் விரும்புகிறார்கள். ரசிகர்களும் அதைத்தான் விரும்புகிறார்கள். அதனால் கவர்ச்சி உடையில் நடிப்பது தவறே இல்லை" என்று கூறுகிறார்.
No comments:
Post a Comment