Wednesday, December 2, 2009
மொபைல் போனில் ஜோதிடம்
மொபைல் போனில் ஜோதிடம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதால், மும்பையில் உள்ள இன்டர்நெட் நிறுவனம் 350 ஜோதிடர்களை பணியில் அமர்த்தியுள்ளது.
தற்போதைய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, வாஸ்து மீது நம்பிக்கை அதிகரித்துள்ளது. இதற்காக இவர்கள் எந்த ஜோதிடரையும் நாடி செல்வதில்லை. பத்திரிகை மூலமும், இன்டர்நெட் மூலமும் தெரிந்து கொள்கின்றனர். சமீபகாலமாக மொபைல்போன் மூலம் ஜோதிட சேவை கிடைப்பதால், அவற்றையும் இந்த இளைஞர்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். மும்பையை சேர்ந்த "கணேஷா ஸ்பீக்.காம்' என்ற நிறுவனம் கடந்த எட்டு ஆண்டுகளாக இன்டர்நெட் மூலம் ஜோதிட சேவையாற்றிவருகிறது. இதன் மூலம் இந்த நிறுவனத்துக்கு கடந்த ஆண்டு 10 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இந்த நிறுவனம் பெங்களூரு, ஆமதாபாத்,மும்பை, புனே ஆகிய இடங்களில் "கால் சென்டர்'களை அமைத்து, 350 ஜோதிடர்களை நியமித்து, உடனுக்குடன் ஜோதிட கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வசதியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிறுவனத்துடன் வோடாபோன், டாடா இன்டிகாம், ஏர்டெல், ஐடியா ஆகிய மொபைல் போன் நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன.
இது குறித்து, கணேஷா ஸ்பீக்.காம் நிறுவன நிர்வாக அதிகாரி ஹேமாங் அருண் கூறியதாவது: அமெரிக்கா மற்றும் பிரிட்டனிலும் எங்கள் சேவையை விரிவு படுத்த திட்டமிட்டுள்ளோம். வரும் 2013ம் ஆண்டில் 100 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட முடிவு செய்துள் ளோம். இதற்காக கூடுதலாக 500 ஜோதிடர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளோம். ஒன்பது மொழிகளில் தற்போது இந்த ஜோதிட சேவை நடக்கிறது. காதல் கை கூடுமா, கிரிக் கெட்டில் வெற்றி பெறுவோமா, வேலை கிடைக் குமா என்பது போன்ற கேள்விகளை வாடிக் கையாளர்கள் கேட்கின்றனர். ஒரு நிமிடத்துக்கு பதில் அளிக்க ஏழு ரூபாய் வசூலிக்கிறோம். 24 மணி நேரமும் பதில் அளிக்கும் வகையில் ஜோதிடர்களுக்கு மாத சம்பளம் 6,000 ரூபாய் முதல் 13 ஆயிரம் ரூபாய் வரையிலான சம்பளத்தில் பணியமர்த்தியுள்ளோம். கேள்விகளுக்கு உடனடியாக பதில் சொல்வதற்காக இந்த ஜோதிடர்களுக்கு இரண்டு வார கால பயிற்சி அளிக்கிறோம். இன்டெர்நெட் மூலம் ஒரு மாதத்துக்கு ஐந்து லட்சம் பேர் இந்த ஜோதிட சேவையால் பயன் பெறுகின்றனர். இவ்வாறு ஹேமாங் அருண் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment