Pages

Sunday, December 6, 2009

இந்திய எல்லையில் பாகிஸ்தான் ரயில் நிலையம் ?

இந்தியாவின் மேற்கு எல்லையில் 2 கிலோ மீட்டர் தொலைவில் பாகிஸ்தானின் ஒரு கிராமம் உள்ளது. தற்போது அங்கு பாகிஸ்தான் புதிதாக ஒரு ரெயில் நிலையம் கட்டி வருகிறது.

அந்த ரெயில் நிலையத்தின் கட்டுமான பணிக்கு சீனா உதவி வருகிறது. அங்கு உயரமான கட்டிடங்கள் கட்டப்பட்டால் அது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும்.

சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இக்கட்டிடத்தில் இருந்தபடியே இந்திய எல்லையை கண்காணிக்க முடியும். மேலும் போர் காலங்களில் மேற்கு எல்லைக்கு பாகிஸ்தான் தனது படைகளையும், ஆயுதங்களை கொண்டு வந்து குவிக்க இது உதவியாக இருக்கும்.

இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானும், சீனாவும் ரகசிய கூட்டு சேர்ந்து சதி செயலில் ஈடுபட்டு வருகின்றன. தற்போது இந்த நடவடிக்கையின் மூலம் மேலும் இந்தியாவுக்கு சிக்கலை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். எனவே அங்கு தீவிர கண்காணிப்பு அவசியம் என ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment