இதில் பணியாற்ற பல்வேறு நாடுகளில் இருந்து தொழிலாளர்கள் அங்கு புறப்பட்டு சென்றுள்ளனர். இவர்களை லண்டனைச் சேர்ந்த சில நிறுவனங்கள் தேர்வு செய்துள்ளன.
அவ்வாறு தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்பட்டுள்ளவர்களில் பலர் சட்ட விரோதமாக வந்துள்ளது தெரிய வந்தது. எனவே, அவர்கள் விசா, பாஸ்போர்ட் உள்ளிட்ட தஸ்தாவேஜூகளை இங்கிலாந்து எல்லை பாதுகாப்பு நிறுவனம் ஆய்வு செய்தது.
இதில் 93 பேர் போலி பாஸ்போர்ட் மற்றும் போலி தஸ்தாவேஜூக்கள் மூலம் வந்தவர்கள் என தெரிய வந்தது. எனவே கடந்த ஏப்ரல் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை அவர்களை அந்நாட்டு போலீசார் கைது செய்தனர். இவர்களில் 41 பேர் போலி பாஸ்போர்ட் மற்றும் போலி தஸ்தாவேஜூக்கள் மூலம் வந்ததாக கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் 32 பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள். 12 பேர் நைஜீரியாவை சேர்ந்தவர்கள். இவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
No comments:
Post a Comment