இங்கிலாந்தில் உள்ள லிசெஸ்டர் பகுதியில் ஈஸ்ட் மிட் லேண்ட் டவுன் என்ற இடத்தைச் சேர்ந்தவர் பாபு நாத சரசியா (வயது 44). இவரது அண்ணன் பரத் ராம் சரசியா (45).
இவர்கள் இருவரும் வெளி நாட்டு வாழ் இந்தியர்கள் ஆவர். இவர்கள் துருக்கியில் இருந்து இங்கிலாந்துக்கு “ஹெராயின்” என்ற போதை பொருளை கார் மூலம் கடத்தி விற்பனை செய்து வந்தனர்.
இவர்களை பிடிக்க லிசெஸ்டர் போலீசார் கண்ணி வைத்து இருந்தனர். அவர்கள் எதிர்பார்த்தது போல் ஹெராயினுடன் வந்த அண்ணன், தம்பியை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 12 கிலோ ஹெராயின் கைப்பற்றப்பட்டது. அதன் மதிப்பு ரூ.9 கோடியே 10 லட்சம் (1.3 மில்லியன் பவுண்ட்ஸ்). போலீசார் பறிமுதல் செய்த திலேயே இதுதான் அதிக அளவாகும். இச்சம்பவம் கடந்த 2007-ம் ஆண்டு ஜூலை மாதம் நடந்தது.
இதை தொடர்ந்து இவர்கள் மீது நாட்டிங்காம் குரவுன் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட பாபுநாத சரசியாவுக்கு 25 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், அவரது அண்ணன் பரத் ராம் சரசியாவுக்கு 18 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார்.
Sunday, December 6, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment