அமெரிக்காவில் ராணுவ அகாடமியில் நடந்த ஒரு விழாவில் அதிபர் ஒபாமா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
அமெரிக்காவில் தாக்குதல் நடத்திய அல்கொய்தா தீவிரவாதிகள் பாதுகாப்புடன் உள்ளனர். அவர்கள் லண்டன், அம்மான், பாலி ஆகிய நகரங்களிலும் தாக்குதல் நடத்தினார்கள். அவர்கள் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பாக பதுங்கியுள்ளனர்.
அது பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு ஆபத்தாக முடியும். பாகிஸ்தானில் அதிக அளவில் அணு ஆயுதங்கள் உள்ளன. அவை அல்கொய்தா உள்ளிட்ட தீவிரவாதிகளின் கைகளில் கிடைக்க கூடாது.
ஆனால், அவற்றை கைப்பற்ற அவர்கள் முயற்சி செய்கிறார்கள். அவர்கள் கையில் அவை கிடைத்தவுடன் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
எனவே தான் ஆப்கானிஸ் தானிலும், பாகிஸ்தானிலும் அவர்களை தோற்கடித்தே தீர வேண்டும்.ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டியுள்ளது.
புற்று நோய் போன்று ஆப்கானிஸ்தான் முழுவதும் தலிபான் தீவிரவாதிகள் பரவி இருந்தனர். அவர்களை அழிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் பாகிஸ்தானின் எல்லையிலும் அவர்கள் பலமாக உள்ளனர். அங்கும் அவர்களை வேரோடு அழிக்க வேண்டும்.
கடந்த சில நாட்களாக கராச்சி, இஸ்லாமாபாத் ஆகிய இடங்களில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி அப்பாவி மக்களை கொன்று குவித்து வருகின்றனர். சுவாத் மற்றும் தெற்கு வரிசிஸ்தானில் பதுங்கியிருக்கும் அவர்களை அழிக்கும் பணியில் பாகிஸ்தான் ராணுவத்துடன் சேர்ந்து அமெரிக்க படைகளும் ஈடுபட்டு வருகின்றன.
பாகிஸ்தானின் பலத்த பாதுகாப்புக்காக அமெரிக்கா உறுதுணையாக உள்ளது. இதை அந்நாட்டு மக்கள் நன்கு அறிந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் பன்னாட்டு படைகள் தலிபான்களை விரட்டியத்தது. அதை தொடர்ந்து கடந்த 2001 மற்றும் 2002-ம் ஆண்டில் இருந்து பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்பாக பதுங்யுள்ளனர்.
தீவிரவாதத்தின் மையமாக பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் திகழ்கிறது. எனவே, அல்கொய்தா, தலிபான் தீவிரவாதிகளை அழிக்க வேண்டும் இதற்கான போர் நடவடிக்கையில் ஈடுபட்ட நமது நண்பர்கள் (வீரர்கள்) பலர் உயிர் தியாகம் செய்துள்ளனர்.
இவ்வாறு அதிபர் ஒபாமா பேசினார்.
இதற்கிடையே, பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரியுடன் ஒபாமா டெலிபோனில் பேசினார். அப்போது ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுடன் அமெரிக்கா மேற்கொள்ள இருக்கும் கொள்கை குறித்து விளக்கினார்.
தீவிரவாதிகளை ஒடுக்கி அழிக்கும் நடவடிக்கையில் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா உதவி செய்யும் என அவர் உறுதி அளித்தார். வடமேற்கு பகுதியில் அல்கொய்தா தீவிரவாதிகளை வெற்றி கொள்ள பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் செய்த தியாகத்தையும் அவர் பாராட்டினார்.
ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமித் கர்சாயுடன் டெலிகான்பரன்ஸ் மூலம் அதிபர் ஓபாமா பேசினார். அப்போது இன்னும் 18 முதல் 24 மாதங்களில் ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளை ஒடுக்கி அமைதியை ஏற்படுத்த வேண்டும். நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். அதற்கான நடவடிக்கையை கடுமையாக மேற்கொள்ள வேண்டும் என்றார்.
Wednesday, December 2, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment