ஈரோடு மாவட்டம் கோபி மற்றும் குன்னத்தூர் பகுதியில் “நெல்” என்ற புதுப்பட சினிமா படப்பிடிப்பு காட்சிகள் நடந்து வருகிறது. இந்த படத்தின் கதாநாயகியாக கேரளாவைச் சேர்ந்த புதுமுகம் பாக்யா அஞ்சலி நடித்து வருகிறார்.
இவரது செல்போனுக்கு ராஜா என்ற மர்ம வாலிபர் மிரட்டல் எஸ்.எம்.எஸ். தொடர்ந்து அனுப்பி வருகிறார்.
“நீ என் படத்தில் நடிக்க வேண்டும். வராவிட்டால் கொலை செய்து விடுவேன். எப்போது வருவாய்?” என்று எஸ்.எம்.எஸ். வந்த வண்ணம் இருந்தது.
இதுகுறித்து நடிகை பாக்யா அஞ்சலியின் மேலாளர் ஈஸ்வரன் (35) கோபி போலீசில் புகார் செய்துள்ளார்.
Wednesday, December 2, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment