அருந்ததியருக்கு 3 சதவீத தனி உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதன் காரணமாக நடப்பு ஆண்டில் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ள 56 அருந்ததியர் வகுப்பு மாணவர்கள், பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்துள்ள 1165 அருந்ததியர் வகுப்பு மாணவர்கள் என மொத்தம் 1221 பேருக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் வீதம் 61 லட்சத்து
5 ஆயிரம் ரூபாயை மருத்துவக்கல்வித்துறை இயக்குநர், தொழில் நுட்பக்கல்வித்துறை இயக்குநர் ஆகியோர் மூலம் வழங்கிட அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த அரசாணையின்படி அருந்ததியின சமுதாயத்தைச்சேர்ந்த மருத்துவக்கல்வி பயிலும் 10 மாணவர்களுக்கும், பொறியியல் கல்வி பயிலும் 13 மாணவர்களுக்கும் தலா 5 ஆயிரம் ரூபாய் வீதம் நிதி வழங்கி மொத்தம் 1221 அருந்ததியின மாணவ மாணவியருக்கு கல்வி வளர்ச்சி நிதி வழங்கும் பணிகளை முதல்-அமைச்சர் கருணாநிதி இன்று காலை தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்.
துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தமிழரசி, நிதித்துறைச் செயலாளர் ஞானதேசிகன், உயர்கல்வித்துறைச்செயலாளர் கணேசன், மக்கள் நல்வாழ்வுத்துறைச்செயலாளர் சுப்புராஜ், தொழில்நுட்பக்கல்வி ஆணையர் ஜெயக்கொடி, ஆகியோர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment