Pages

Saturday, December 5, 2009

செக்ஸ் தொந்தரவு - இத்தாலியில் பெண் நர்ஸ் கொலை ?

இங்கிலாந்தை சேர்ந்தவர் மெரிடித்கெர்சர் (வயது 21). இவர் இத்தாலியில் சர்ரே நகரில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார்.

அதே பல்கலைக்கழகத்தில் அமெரிக்காவை சேர்ந்த அமண்டாநாஸ் (22) என்ற மாணவியும் படித்தார். இவளது காதலன் ரபேல் சொலேசிடோ (25). இவர் இத்தாலியை சேர்ந்தவர்.

இந்த நிலையில் நாஸ் மூலம் கெர்சருடன் சொலே சிடோவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கெர்சருக்கு, சொலேசிடோ அடிக்கடி “செக்ஸ்” தொந்தரவு கொடுத்து வந்தான்.

இதற்கு அவனது காதலி நாஸ் உடந்தையாக இருந்தாள். இதற்கிடையே பெருஜியாவில் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் கெர்சர் பிணமாக கிடந்தாள். இச்சம்பவம் கடந்த 2007-ம் ஆண்டு நடந்தது.

இதுதொடர்பாக சொலே சிடோவையும், அவனது காதலி நாஸையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது இத்தாலியில் உள்ள கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட நாஸீக்கு 26 ஆண்டு ஜெயில் தண்டனையும், சொலோசிடோவுக்கு 25 ஆண்டு ஜெயில் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் தொடர்புடைய போதை பொருள் விற்பனையாளர் ரூடிகூடே (22) என்பவனுக்கு ஏற்கனவே 30 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

No comments:

Post a Comment