Pages

Monday, December 21, 2009

ஹேமலதா புகார்: சாமியார் ஸ்ரீகுமார் சவால் கற்பழிப்பை நிரூபிக்க தயாரா?

தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர் ஹேமலதா (30). இவர் தி.நகரில் வசித்து வரும் பிரபல சாமியார் ஈஸ்வர் ஸ்ரீகுமார் மீது பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறி போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார். கடந்த செப்டம்பர் மாதம் கொடுக்கப்பட்ட இந்த புகார் மனுவில், சாமியாரிடம் நான் வேலை செய்த போது காபியில் மயக்க மருந்து கலந்து கொடுத்து அவர் என்னை கற்பழித்து விட்டார். மயக்கம் தெளிந்து நான் அவரிடம் இதுபற்றி கேட்டபோது, உன்னை ஆபாசமாக படம் எடுத்துள்ளேன். எனக்கு எதிராக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தால் சும்மா விட மாட்டேன் என்று மிரட்டினார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த புகார் மனு குறித்து 3 மாதங்களுக்கு பிறகு மாம்பலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

நேற்று மாலையில் ஹேமலதாவை அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர். மாம்பலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் வைத்து 1 மணி நேரத்துக்கும் மேலாக அவரிடம் மகளிர் போலீசார் துணையுடன் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அப்போது சாமியார் ஸ்ரீகுமாரிடம் வேலைக்கு சேர்ந்த நாள் முதல் என்னென்ன நடந்தது. அவர் தன்னுடன் எப்படியெல்லாம் நடந்து கொண்டார் என்பது குறித்து ஹேமலதா விரிவாக விளக்கம் அளித்துள்ளார். இந்த விசாரணை விவரங்கள் அனைத்தையும் வாக்கு மூலமாக போலீசார் பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் சரவணனிடம் கேட்டபோது, விசாரணை விவரங்கள் அனைத்தையும் உடனடியாக வெளியிட முடியாது. தேவைப்பட்டால் ஹேமலதாவிடம் மீண்டும் விசாரணை நடத்துவோம். இவர் அளித்துள்ள தகவல்களின் அடிப்படையில் ஈஸ்வர் குமாரிடமும் விசாரணை நடத்த உள்ளோம். இதற்காக அவருக்கு சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளோம் என்றார்.

ஹேமலதாவுக்கு மருத்துவ பரிசோதனை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக முறைப்படி கோர்ட்டு அனுமதிபெற்று இன்று மாலை அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்படும் என்று தெரிகிறது.

நேற்று மாலையில் விசாரணை முடிந்து வெளியில் வந்த ஹேமலதா நிருபர்களிடம் கூறும்போது, சாமியார் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும். உரிய முறையில் போலீசார் விசாரணை நடத்தி எனக்கு நியாயம் வழங்க வேண்டும் என்று கூறினார்.

சாமியார் ஈஸ்வர் ஸ்ரீகுமார் " என் மீது புகார் கொடுத்துள்ள பெண் கடந்த 2007-ம் ஆண்டு ஜனவரி மாதம் 23-ந்தேதி நான் அவரை கற்பழித்ததாக புகாரில் கூறியுள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக இதனை ஏன் வெளியில் சொல்ல வில்லை. இத்தனை நாட்களும் அவர் மயங்கிய நிலையில் இருந்தாரா?

என் மீது அவர் 5 விதமாக மாறி மாறி புகார் தெரிவித்துள்ளார். என்னை உள்ளே தள்ளினால் தான் திருப்தி என்கிற ரீதியில் அவர் பேட்டி கொடுத்துள்ளார். நான் எந்த தவறும் செய்யவில்லை. முடிந்தால் என் மீதான புகாரை அப்பெண் நிரூபித்து காட்டட்டும்.

ஒரு முறை சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக கூறியதாகவும், இன்னொரு முறை டெல்லியில் வேலை வாங்கி தருவதாக நான் கூறியதாகவும் தப்பு தப்பாக அவர் பேசுகிறார்.

இதன் பின்னணியில் ஏதோ சூழ்ச்சி நடக்கிறது. ஹேமலதா யார்-யாருடன் பேசுகிறார் என்பதை கண்டு பிடித்தால் அதன் பின்னணி தெரிய வரும்.

ஆன்மீக உலகில் என்னை குருஜி என்று அழைப்பார்கள். தமிழகம் முழுவதும் ஏராளமான கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தியுள்ளேன். நெல்லை மாவட்டம் கடையம் கல்யாணி அம்மன் கோவில் கல்வெட்டில் எனது பெயர் இடம் பெற்றுள்ளது. ஆன்மீகவாதிகள் என்னை மரியாதைக்குரியவராகவே நடத்தி வந்துள்ளனர். எனது புகழை கெடுக்க சதி திட்டம் தீட்டப்படுகிறது. இதில் இருந்து நான் நிச்சயம் மீண்டு வருவேன்.

50 முறை நான் பலாத்காரம் செய்ததாக ஹேமலதா கூறியுள்ளார். நான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் என்னை பற்றி விசாரித்து பாருங்கள். உங்களுக்கு எல்லாம் தெரியும்.

எனது மனைவிக்கு மசாஜ் செய்ய வந்தவர் இப்படி என்னை மாட்டி விடுவார் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை.

ஆன்மீக பெரியவரான சங்கராச்சாரியாருக்கே சோதனை ஏற்பட்டு விட்டது. நானெல்லாம் எம்மாத்திரம்.

நான் எந்த தவறும் செய்யாததால்தான் பயமில்லாமல் இருக்கிறேன். முன் ஜாமீன் கேட்டு மனு எதுவும் தாக்கல் செய்யவில்லை. எந்த நேரத்தில் போலீசார் அழைத்தாலும் விசாரணைக்கு செல்ல தயாராக இருக்கிறேன் "

இவ்வாறு சாமியார் ஈஸ்வர் ஸ்ரீகுமார் கூறினார்.

No comments:

Post a Comment