இது குறித்து மாம்பலம் உதவி போலீஸ் கமிஷனர் கண்ணாபிரான் மேற் பார்வையில் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். முதல் கட்டமாக ஹேமலதா விடம் விசாரித்து வாக்குமூலம் பெற்றார். அப்போது அவர் சாமியார் தனக்கு காபியில் மயக்க மருந்து கொடுத்து கற்பழித்ததாகவும் அதை செல்போன் மூலம் படம் எடுத்து வைத்து மிரட்டுவதாகவும் கூறினார். ஒரு சில ஆதாரங்களையும் போலீசில் ஒப்படைத்தார்.
தொடர்ந்து டிரைவர் ஆனந்தன், வீட்டு காவலாளி, வேளச்சேரியில் உள்ள ஹேமலதாவின் தாய், தந்தை உள்பட 30 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் சாமியாருக்கும், ஹேமலதாவுக்கும் ரகசிய தொடர்பு இருந்தது உறுதியாகி உள்ளது. சாமியார் ஹேமலதாவை பலாத்காரம் செய்தார் என்பதற்கு போதிய ஆதாரங்கள் கிடைக்க வில்லை.
அதனால் ஹேமலதாவுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் அறிக்கை இன்னும் 2 நாட்களில் போலீசுக்கு கிடைத்து விடும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே கற்பழிப்பு வழக்கை சந்திக்கத்தயார் என்று சவால் விட்ட சாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமார் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகி விட்டார். கடந்த 2 நாட்களாக திருப்பதியில் பதுங்கியிருந்த சாமியார் தனது வாக்குமூலத்தையும், ஹேமலதாவிற்கு எதிரான ஆதாரங்களையும் தனது உதவியாளர் மூலம் போலீசுக்கு கொடுத்து அனுப்பினார்.
இதைப்பார்த்த போலீசார் ஆத்திரம் அடைந்தனர். செல்போன் மூலம் சாமியாரை தொடர்பு கொண்டனர். தவறு செய்யாதவர் என்றால் போலீசில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டியதுதானே. ஏன் ஓடி ஒளிய வேண்டும் என்று கேட்டனர்.
அதற்கு சாமியார் நான் முக்கியமான வேலை விஷயமாக தற்போது டெல்லியில் இருக்கிறேன். வேலையை முடித்து விட்டு 2 நாட்களில் வருகிறேன் என்று பவ்யமாக பதில் அளித்தார். அவரது பதிலால் அதிர்ச்சி அடைந்த போலீசார், இன்னும் 24 மணி நேரத்தில் மாம்பலம் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி போலீஸ் விசாரணைக்கு, ஒத்துழைக்க வேண்டும். இல்லையென்றால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கெடு விதித்துள்ளனர்.
சாமியாரின் வாக்கு மூலத்தை வாங்க மறுத்த போலீசார் அவரது உதவியாளரை திருப்பி அனுப்பி விட்டனர். இதனால் இன்று மாலை அல்லது நாளை காலைக்குள் சாமியார் போலீஸ் நிலையம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சாமியார் டெல்லியில் இருந்து சில முக்கிய பிரமுகர் களை சந்தித்து, அவர்கள் மூலம் போலீசாருக்கு நெருக்கடி கொடுத்து வருவதாகவும், அதன் காரணமாகவே சாமியாரை நெருங்க போலீசார் அஞ்சு கின்றனர் என்றும் அவர் மீது 376, 506 பகுதி-1 என்ற 2 பிரிவுகளில் மட்டுமே வழக்கு போடப்பட்டுள்ளது. ஆபாசபடம் எடுத்தல் 294பி என்ற பிரிவு விடப்பட்டுள்ளது என்றும் ஹேமலதா தரப்பினர் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
போலீசார் கெடு விதித்ததை தொடர்ந்து சாமியார் விவகாரத்தில் சூடு பறக்க ஆரம்பித்துள்ளது.
No comments:
Post a Comment