Pages

Monday, December 21, 2009

சந்திரசேகரராவ் மீது நடிகை ரோஜா தாக்கு; பதவி ஆசையால் மாநிலத்தை பிரிக்கத் துடிக்கிறார்

ஆந்திராவை இரண்டாகப்பிரிப்பதற்கு நடிகை ரோஜா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் ஐக்கிய ஆந்திராவுக்கு ஆதரவாகப்போராடி வரும் மாணவர்கள், கட்சி தலைவர்களை சந்தித்து போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகிறார். அவர் நேற்று அனந்தபுரம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் தெலுங்கு தேசம் பெண் எம்.எல்.ஏ. பிரிட்டால் சகிதாவை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

பின்னர் வெளியே வந்த ரோஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

தெலுங்கானா கட்சி தலைவர் சந்திரசேகரராவ் பதவி ஆசை பிடித்தவர். அவர் பதவிக்கு வர வேண்டும் என்ற ஆசையில் ஆந்திராவை பிரிக்கத்துடிக்கிறார். அவர் ஒரு நீரிழிவு நோயாளி. நீரிழிவு நோயாளியால் உண்ணாவிரதம் இருக்க முடியாது. இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.

ஆனால் சந்திரசேகரராவ் 2 அல்லது 3 நாள் அல்ல 11 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். உண்ணாவிரதம் முடித்த மறுநாள் நன்றாக எழுந்து வீட்டுக்கு சென்று விட்டார். இதன் மூலம் அவர் உண்ணாவிரதம் இருக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது. விரதம் இருப்பதாக நாடகம் ஆடி உள்ளார். இந்த நாடகம் மூலம் அவர் உண்ணாவிரத போராட்டத்தை மிகவும் கேவலப்படுத்தி விட்டார்.

நான் 2 ஆண்டுகளுக்கு முன்பே இந்த சந்திரசேகரராவ் ஒரு அரசியல் கோமாளி என்று கூறினேன். அது தற்போது உண்மையாகி உள்ளது. தெலுங்கானா என்பது அவர் குடும்ப சொத்து போல நினைக்கிறார். அவருக்கு ஆந்திர மக்கள் சரியான நேரத்தில் பாடம் புகட்டுவார்கள் "

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment