உலக மகா பிராடு தொழிலதிபர்கள் என்று போர்ப்ஸ் பத்திரிக்கை பட்டியலிட்டதில் சத்யம் கம்ப்யூட்டர்ஸ் ராமலிங்க ராஜுவுக்கு நான்காவது இடம் கிடைத்துள்ளது. அமெரிக்க பங்குச் சந்தையில் மோசடி செய்ததாக சமீபத்தில் கைது செய்யப்பட்ட ராஜரத்னத்துக்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த போர்ப்ஸ் பத்திரிகை, இந்த ஆண்டுக்கான மெகா மோசடி தொழிலதிபர்கள் என்று 10 பேரைப் பட்டியலிட்டுள்ளது.
இந்த பட்டியலில், "கோல்ட்மேன் சச்ஸ்' நிறுவனத்தின் தலைவர் லாய்டு பிளாங்க்பெய்ன் முதலிடத்தில் உள்ளார். "மெரில் லின்ச்' நிறுவன மாஜி தலைவர் ஜான் தெய்ன் இரண்டாமிடம். அமெரிக்கப் பங்குச் சந்தையில் மோசடி, புலிகளுக்குப் பண உதவி போன்ற குற்றச்சாட்டுகளின் சொந்தக்காரரான இலங்கையைச் சேர்ந்த ராஜரத்னம் மூன்றாம் இடத்தில் இருக்கிறார். சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தை நிறுவி, அதன் பங்குகளைத் தன் பெயரிலும் தனக்குச் சொந்தமான நிறுவனங்களின் பெயரிலும் மாற்றி பல கோடிகளை மோசடி செய்த ராமலிங்க ராஜு, நான்காம் இடத்தில் இருக்கிறார்.
அமெரிக்கத் தொழிலதிபர் தாமஸ் பீட்டர்ஸ் ஐந்தாமிடம்; ஏ.ஐ.ஜி., நிறுவனத்தின் முன்னாள் தலைவர் எட்வர்ட் எம்.லிட்டி ஆறாமிடம்; "பிரைவேட் ஈக்விட்டி மேனேஜ்மென்ட் க்ரூப்' நிறுவனத்தின் தலைவர் டான்னி பாங்க் ஏழாமிடம்; 21 கிரிமினல் வழக்குகள் பதியப்பட்ட பில்லியனரி அல்லென் ஸ்டான்போர்டு எட்டாமிடம்; ஒன்பதாமிடத்தில் சி.டி.ஆர்., நிதிநிறுவனத்தின் தலைவர் டேவிட் ரூபின்; பத்தாமிடத்தில் "மொரன் யாச்ட் அண்டு ஷிப்' நிறுவனத்தின் தலைவர் ராபர்ட் மொரன். "பெர்னார்ட் மடோப் என்பவரை இவர்கள் பத்துப்பேரும் சேர்ந்தாலும் "பிராடு'த் தனத்தில் வெல்ல முடியாது என்றாலும், அவர்களிடம் பேராசை, ஆணவம் இவற்றுக்கு ஒன்றும் குறைச்சல் கிடையாது' என்று போர்ப்ஸ் பத்திரிகை முத்தாய்ப்பு வைத்துள்ளது.
Wednesday, December 2, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment