Friday, December 18, 2009
வேலூர் மாவட்டம் புதிய திரைப்படம்
ஈரம் படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் நந்தா ஒப்பந்தமாகியுள்ள புதிய படத்திற்கு வேலூர் மாவட்டம் என்று பெயர் சூட்டியுள்ளனர். இந்த படத்தில் நந்தாவுக்கு ஜோடியாக நடிகை பூர்ணா நடிக்கிறார். கந்தகோட்டை படத்தை தயாரித்த கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரிக்கும் இந்த படத்தின் சூட்டிங் முழுக்க முழுக்க வேலூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நடைபெற உள்ளது. டைரக்டர் மனோகர் படத்தை இயக்குகிறார். இதுபற்றி அவர் கூறுகையில், "தமிழ் சினிமாவில் வேலூர் மாவட்டம் முழுக்க முழுக்க புறக்கணிக்கப்பட்டதாகவே இருக்கிறது. இத்தனைக்கும் தமிழ் சினிமா பாக்ஸ் ஆபீஸில் வருவாய் கொட்டும் மாவட்டம் இந்த வேலூர்தான். இந்தப் பகுதியில் உள்ள எத்தனையோ கலாச்சார நிகழ்வுகள் பதிவு செய்யப் படுவதில்லை. மற்ற மாவட்டங்களோடு ஒப்பிடுகையில் வேலூர் மாவட்ட மக்களின் லைப் ஸ்டைல் மிக மிக எளிமையானது. மதுரை மற்றும் திருநெல்வேலி கதைகளையே பார்த்து வரும் தமிழ் ரசிகர்களுக்கு, இந்த வேலூர் மாவட்ட விருந்து நிச்சயம் வித்தியாசமாகவும் சுவையாகவும் இருக்கும்" என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment