Pages

Friday, December 18, 2009

அத்வானியின் புதிய அவதாரம்

மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக சுஷ்மா சுவராஜுக்கு வழி விடும் வகையில் பா.ஜ. நாடாளுமன்றக் குழு தலைவராக அத்வானி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பா.ஜ. தலைவர் ராஜ்நாத் சிங்கின் பதவிக் காலம் 24ம் தேதியுடன் முடிகிறது. புதிய தலைவராக மகாராஷ்டிர பா.ஜ. தலைவர் நிதின் கட்கரி தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தெரிகிறது. மக்களவைத் தேர்தல் தோல்விக்கு பின் அத்வானியும் பதவி விலக நெருக்கடி எழுந்தது. இதைத் தொடர்ந்து, ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் ஆலோசனைப்படி எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலக அத்வானி முடிவு செய்துள்ளார். புதிய தலைவராக சுஷ்மா சுவராஜ் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தெரிகிறது. சுஷ்மாவுக்கு வழிவிடும் அதே நேரத்தில், அத்வானி கவுரவமாக பதவி விலகும் வகையில் இரு அவைகளையும் சேர்ந்த பா.ஜ. எம்.பி.க்களின் நாடாளுமன்றக் குழு தலைவராக அத்வானி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். டெல்லியில் நேற்று நடந்த பா.ஜ. எம்.பி.க்கள் கூட்டத்தில் அத்வானி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்காக பா.ஜ. சட்ட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு புதிய பதவி உருவாக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment