( MODEL )
மலப்புரம் அருகே செய்யப்பட்டார்.
கேரள மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளராக இருப்பவர் ராஜ்மோகன் உண்ணித்தான் (54). இவர் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தவர். நேற்று முன்தினம் நள்ளிரவு இவர் மலப்புரம் மாவட்டம் மஞ்சேரியில் உள்ள ஒரு வீட்டில் டி.வி. நடிகை ஜெயலட்சுமி என்பவருடன் விபசாரத்தில் ஈடுபட்டதாக மஞ்சேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
ஆனால், போலீசார் அங்கு செல்வதற்குள் அந்த பகுதியினர் திரண்டு அந்த வீட்டிற்குள் புகுந்து ராஜ்மோகன் உண்ணித்தானையும், ஜெயலட்சுமியையும் தாக்கி உள்ளனர். இதில் ராஜ்மோகனின் சட்டை கிழிந்தது. அவரது செல்போனும் காணாமல் போனது. அதற்குள் போலீசார் அங்கு சென்று இருவரையும் மீட்டு மஞ்சேரி காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
காங்கிரஸ் தலைவர் ராஜ்மோகன் உண்ணித்தான், டி.வி. நடிகை ஜெயலட்சுமியுடன் விபசாரத்தில் ஈடுபட்டு பிடிபட்ட தகவல் அப்பகுதியில் பரவியது. ஏராளமான மார்க்சிஸ்ட் தொண்டர்களும், மதானியின் பிடிபி கட்சி தொண்டர்களும் மஞ்சேரி காவல் நிலையம் முன் குவிந்து இருவரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
இதை தொடர்ந்து ராஜ்மோகன் மற்றும் டிவி நடிகை ஆகியோர் மீது போலீசார் விபசார வழக்கு பதிவு செய்தனர். பின்னர் இருவரையும் போலீசார் மஞ்சேரி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இதைத் தொடர்ந்து வாரத்தில் ஒரு நாள் மஞ்சேரி போலீசில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் இருவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியிலிருந்து ராஜ்மோகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
Monday, December 21, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment