புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா தேக்காட்டூரில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்கு குணரத்தினம் (48) என்பவரது வீட்டின் மேற்கு சுவரில் எலி வளை இருந்தது. இதை அகற்ற குணரத்தினம் மண்வெட்டினார் . அப்போது ஒருவித புகை கிளம்பியது. பூமிக்குள் இருந்து புகை வருவதை பார்த்த அவர் தண்ணீர் ஊற்றி அணைக்க முயன்றார். இருப்பினும் புகை வருவது நிற்கவில்லை.
இதனால் திருமயம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். உடனே நிலைய அதிகாரி கோபால் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். ஆனால் புகை வருவது நிற்கவில்லை.
இதைத் தொடர்ந்து கோட்ட தீயணைப்பு அதிகாரி நந்தகோபால், உதவி அதிகாரி ராஜசேகர் ஆகியோர் தனிப்படையுடன் வந்தனர்.
கட்டிடத்தின் அஸ்திவார ஓரத்தில் கருங்கல் பகுதியில் புகை வந்து கொண்டே இருந்தது. தீயணைப்பு நிலைய அதிகாரிகள் உடனே திருமயம் தாசில்தாருக்கு தகவல் கொடுத்தனர்.
தாசில்தார் சண்முகம் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் 6 அடி நீள 6 அடி அகல 6 அடி ஆழத்தில் குழி வெட்டப்பட்டது. அப்போது குணரத்தினத்தின் வீட்டு சுவர் அஸ்திவார பகுதியில் இருந்து புகை வந்தது தெரிய வந்தது. பின்னர் அக்குழியில் நீர் நிரப்பப்பட்டது. புகை வருவது நின்றது.
இதுகுறித்து நமணசமுத்திரம போலீசார் வழக்கு பதிவு செய்து வெடி பொருகள் ஏதும் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதா என்ற விசாரணை நடத்தி வருகின்றனர்.
Monday, December 21, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment