லோக்சபாவில் கேள்வி நேரத்தின் போது எழுத்து மூலம் பதிலளித்து அவர் பேசியதாவது: "பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் அதிகமுள்ள மாநிலங்களான வடகிழக்கு மாநிலங்கள், மே.வங்கம், குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், ஜம்மு - காஷ்மீர், இமாச்சல பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் உத்தரகண்ட் உட்பட 20 மாநிலங்களில், சீன மொபைல் போன்களைப் பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த மொபைல் போன்களுக்கு பி.எஸ்.என்.எல்., இணைப்புகள் வழங்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. டில்லி, தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, கோவா, மத்திய பிரதேசம் மற்றும் சட்டீஸ்கர் மாநிலங்களில் புதியதாக 2.5 கோடி இணைப்புகளை வழங்க, சீன மொபைல் போன் நிறுவனமான, "ஹூவாய்'யுடன், பி.எஸ்.என்.எல்., நிறுவனம் எந்தவிதமான ஒப்பந்தமும் செய்து கொள்ளவில்லை. இவ்வாறு குருதாஸ் காமத் கூறினார்.
No comments:
Post a Comment