Pages

Thursday, December 3, 2009

ஸ்வீடனில் ஆணி படுக்கை


இந்திய யோகாசன முறைகளில் ஒன்றான ஆணிப் படுக்கை, சுவீடன் நாட்டில் இப்போது அமோகமாக விற்க ஆரம்பித்துள்ளது. அதில் படுத்து யோகா செய்வதை அந்நாட்டு மக்கள் மிகவும் விரும்புகின்றனர். உடலையும் உள்ளத்தையும் அமைதியுறச் செய்யும் யோகாசன முறைகளில் ஆணிப் படுக்கையில் படுப்பதும் ஒன்று. நம் நாட்டில் பொதுவாக துறவிகள் இதை மிகச் சாதாரணமாக செய்வர்.


யோகா முறை வெளிநாடுகளில் இப்போது மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. சுவீடன் நாட்டுக் காரர்கள் யோகா செய்வதை மிகவும் விரும்புகின்றனர். அதிலும், ஆணிப் படுக்கையில் படுத்து தியானம் செய்வது அங்கு அதிகரித்து வருகிறது. இதற்காக பருத்தித் துணி போர்த்தப்பட்ட ரப்பர் மெத்தையில் பிளாஸ்டிக்கில் கூர்மையான ஆணிகளைப் பொருத்தி விற்கின்றனர். "சக்தி' என்ற கம்பெனியின் ஆணிப் படுக்கையை வாங்குவதற் காக 3,000 பேர் ஒரே இடத்தில் கூடிய சம்பவம், சமீபத்தில் சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நடந்துள்ளது.


இந்த ஆணிப் படுக்கையில் படுத்து எழுவதனால், உடலிலுள்ள அட்ரினல் சுரப்பிகள் சுறுசுறுப்பாக வேலை செய்வதாக அந்நாட்டு யோகா நிபுணர் கத்ரினா ஜான்சன் கூறுகிறார். இந்த யோகா முறை அங்கு மிக வேகமாக பிரபலமாகி வருகிறது. சமீபத்தில் ஒரே இடத்தில் ஆயிரக் கணக்கானோர் கூடி ஆணிப் படுக்கையில் அமர்ந்தபடி மந்திரங் களைச் சொன்னார்கள். இந்த நிகழ்ச்சி கின்னசில் இடம்பிடித் துள்ளது.

No comments:

Post a Comment