Pages

Thursday, December 3, 2009

நல்ல முதல்வர்


புதுச்சேரி முதல்வர் வைத்திலிங்கம் தனது சொத்து விவரங்களை நேற்று வெளியிட்டார். முதல்வர் வைத்திலிங்கம் நிருபர்களிடம் கூறும்போது, "முதல்வர், அமைச்சர்கள் தங்களது சொத்து விவரங்களை அளிக்க வேண்டும் என்று, மத்திய அரசு வழிகாட்டுதல் அளித்துள்ளது. இதன்படி எனது சொத்து விவரங்களை மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளேன். மேலும், இந்த விவரங்களை பொதுமக்களுக்கும் தெரிவிக்க விரும்புகிறேன்' என்றார்.


சொத்து விவரம் வருமாறு: வைத்திலிங்கத்தின் பெயரில் 50 லட்சத்து 56 ஆயிரத்து 636 ரூபாய் வங்கிகளில் டெபாசிட்டாகவும், 18 லட்சம் ரூபாய் மியூச்சுவல் நிதியாகவும் உள்ளது. 12 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கு எல்.ஐ.சி., பாலிசி உள்ளது. புதுச்சேரி ஸ்பின்னர்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ரிலையன்ஸ் கேபிட்டல், ரிலையன்ஸ் இன்ப்ரா, ஆர்.என்.ஆர்.எல்., ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், இந்தியன் பேங்க் ஆகிய நிறுவனங்களில் ஷேர்கள் உள்ளன. மேலும், 11 எக்டேர் -52 ஆர் -16 சாந்தியார் விவசாய நிலமும், பூமியான்பேட்டையில் பிளாட், மூலக்குளத்தில் கட்டடம், பிருந்தாவனத்தில் இரண்டு வீடுகள், மடுகரையில் ஒரு வீடு உள்ளன. இரண்டு டிராக்டர்கள், ஒரு டிரெய்லர், 50 கிராம் நகைகள்உள்ளன.


வைத்திலிங்கத்தின் மனைவி சசிகலா பெயரில், வங்கிகளில் டெபாசிட்டாக 58 லட்சத்து 37 ஆயிரத்து 770 ரூபாய், மியூச்சுவல் நிதியாக ஏழு லட்சம் ரூபாய் உள்ளது. ஏழு லட்சம் ரூபாய்க்கு எல்.ஐ.சி., பாலிசி உள்ளது. ஆந்திரா பேங்க், இந்தியன் பேங்க், பெரிய காரமலை டீ, புதுச்சேரி ஸ்பின்னர்ஸ் நிறுவனம் ஆகியவற்றில் ஷேர் வைத்துள்ளார். இவருக்கு மூன்று எக்டேர் -88 ஆர் -3 சாந்தியார் விவசாய நிலமும், மடுகரையில் கட்டடமும், புதுச்சேரியில் வீடும் உள்ளன. 850 கிராம் நகைகள் மற்றும் இண்டிகா கார் உள்ளன.

No comments:

Post a Comment