
"ரேனிகுண்டா படம் முழுக்க வன்முறை தலைவிரித்து ஆடுவதாக பரவலான பேச்சு நிலவுகிறது. இதுபற்றி படத்தின் இயக்குனர் பன்னீர்செல்வம் அளித்துள்ள பேட்டியில், ரேனிகுண்டா படத்தின் களமே வன்முறைதானே. களத்தை விட்டு நான் எங்கே போய் கதை சொல்லுவது? களத்துக்கு ஏற்றவாறுதான் கதை செய்ய முடியும். கவிதைத் தனமான கதையில் வன்முறையை திணிக்கவில்லையே. அரவணைக்கவும், அன்பு காட்டவும் ஆள் இல்லாத உலகத்தில் இருந்து வந்தவர்களின் வாழ்க்கையில் வன்முறையை தவிர என்ன சொல்லிவிட முடியும்? ஆனாலும் வன்முறையைத் தாண்டிய சில அதிர்வுகளை படம் ஏற்படுத்தியிருப்பதாக உணர்கிறேன். அது இனி தொடராமல் இருக்க முயற்சிக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment