Pages

Monday, December 21, 2009

ஆந்திராவை பிரிப்பதை கண்டித்து டெல்லியில் போராட்டம் நடத்துவோம்; நடிகர் சிரஞ்சீவி அறிவிப்பு

ஆந்திராவை இரண்டாக பிரிப்பதற்கு நடிகர் சிரஞ்சீவி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதை வலியுறுத்தி அவரும், அவரது கட்சி எம்.எல்.ஏ.க்களும் பதவி விலகினார்கள். தற்போது சிரஞ்சீவி ஆந்திரா முழுவதும் சென்று ஐக்கிய ஆந்திராவுக்கு, ஆதரவாக பிரசாரம் செய்து வருகிறார்.

நேற்று அவர் விஜயவாடா சென்று உண்ணாவிரதம் இருக்கும் காங்கிரஸ் எம்.பி. ராஜகோபால், தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ. உமா மகேஸ்வரராவ் ஆகியோரை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

பின்னர் அங்கு தடையை மீறி போராட்டம் நடத்தினார். அவரை போலீசார் கைது செய்து சிறிது நேரத்தில் விடுவித்தனர். இந்நிலையில் சிரஞ்சீவி நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆந்திராவை பிரித்தால் மாநிலத்தின் நலன் கடுமையாக பாதிக்கும். ராயலசீமா, கடலோர ஆந்திர பகுதியை சேர்ந்த மாணவர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாவார்கள்.

ஆந்திரா ஒற்றுமையாக இருப்பதுதான் நல்லது. தெலுங்கானா பகுதியில் உள்ள பெரும்பாலான மக்கள் ஐக்கிய ஆந்திராவைத்தான் விரும்புகிறார்கள்.

நான் இக்கோரிக்கையை வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்தவும் தயாராக உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment