"மத்திய, மாநில அரசுகள் இளைஞர்களின் முன்னேற்றத்துக்காக எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை,'' என்று வருண் எம்.பி., குற்றம்சாட்டியுள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் ராகுல் தொகுதியில் உள்ள சுல்தான்பூரில் நடந்த கட்சிப் பேரணியில் கலந்து கொண்ட வருண் எம்.பி., பேசியதாவது:உ.பி.,யில் இளைஞர்களின் நிலை திருப்தியாக இல்லை. மத்திய, மாநில அரசுகள் அவர்கள் முன்னேற்றத்துக்கான நடவடிக்கை எடுப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. மாயாவதி அரசு, இளைஞர்களை புறக்கணித்து பூங்காக்கள் கட்டுவதிலும், சிலைகள் அமைப்பதிலும் ஈடுபடுகிறது.
இளைஞர்கள் சுயதொழிலில் ஈடுபட, அரசு ஐந்திலிருந்து ஏழு லட்ச ரூபாய் வரை கடனுதவி வழங்க வேண்டும். நாட்டில் பணக்கார வர்க்கத்துக்கும், ஏழைகளுக்குமான இடைவெளி அதிகரித்துக் கொண்டே வருவது துரதிர்ஷ்டவசமானது.வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரேஷன் அட்டைகள், வசதி படைத்தவர்களுக்கு தரப்படுவது வியப்பாக இருக்கிறது.இவ்வாறு வருண் தெரிவித்தார்.
No comments:
Post a Comment