Pages

Sunday, December 6, 2009

இந்தியாவின் புனித நதி கங்கைக்கு கங்கைக்கு

பூமி வெப்பமயமாதல் பிரச்சினை தற்போது உலகம் முழுவதும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனால் கார்பன் டை ஆக்சைடு அதிகரித்து அண்டார்டிகாவில் பனிக்கட்டிகள் உருகுவதால் கடல் நீர்மட்டம் அதிகரித்து கடற்கரை நகரங்கள் மூழ்கும் அபாயம் இருப்பது தெரியவந்துள்ளது. இதுபோன்று பூமியில் மேலும் பல பிரச்சினைகள் உருவாக வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் இந்தியாவின் புனித நதியும், மிகப்பெரிய முக்கிய நதியுமான கங்கைக்கும் கங்கைக்கு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

கங்கை நதி பனிபடர்ந்த இமயமலையில் கங்கோத்ரி என்ற இடத்தில் உற்பத்தியாகிறது. அங்கு படிந்திருக்கும் பனிப்படலங்கள் நீராக உருகி கங்கை ஆகிறது. ஆனால் இது உற்பத்தியாகும் கங்கோத்ரியில் 15 முதல் 20 மீட்டர் நீளத்துக்கு அதாவது 1 1/2 கி.மீட்டர் தூரத்துக்கு பனிக்கட்டிகளே இல்லை என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இந்த தகவலை இந்தியாவின் விண்வெளி நிறுவனமான “இஸ்ரோ” தெரிவித்துள்ளது. அகமதாபாத்தில் உள்ள இஸ்ரோவின் விண்வெளி மைய இயக்குனர் டாக்டர் ஆர்.ஆர்.நவல்குந்த் தெரிவித்துள்ளார்.

“இஸ்ரோ” அனுப்பியுள்ள செயற்கைகோள் எடுத்து அனுப்பியுள்ள புகைப்படத்தில் இது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. பூமி வெப்பமயமாகி வருவதால் கடந்த 30 ஆண்டுகளாக பனிபடிவங்கள் அளவுக்கு அதிகமாக உருகி சுமார் 1 1/2 கி.மீட்டர் தூரத்துக்கு இல்லாமல் போய்விட்டது என்று அவர் தெரிவித்தார். இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் இன்னும் சில ஆண்டுகளில் கங்கை நதி வற்றிவிடும் சூழ்நிலை உருவாககூடும். எனவே இதை தடுப்பது குறித்து மத்திய சுற்றுச்சூழல் மந்திரி ஜெய்ராம் ரமேஷ் தலைமையில் இந்த ஆய்வு அறிக்கையின் மீது விவாதம் நடத்தப்பட்டது.

No comments:

Post a Comment