Pages

Sunday, December 6, 2009

ஏ.ஆர்.ரகுமான் பெயர் கிராமி விருதுக்கு சிபாரிசு

இசை உலகின் ஆஸ்கார் என்று போற்றப்படுவது `கிராமி' விருது. 2010-ம் ஆண்டுக்கான சிறந்த இசைக்கலைஞர்களுக்கான கிராமி விருது வழங்கும் விழா அடுத்த மாதம் 31-ந் தேதி லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கிறது.

இந்த உயரிய விருதுக்கு பிரபல இந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பெயர் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. `ஸ்லம்டாக் மில்லினர்' படத்தின் சிறந்த ஒலிப்பதிவுக்காக அவரது பெயர் கிராமி விருதுக்கு சிபாரிசு செய்யப்பட்டு உள்ளது. இதேபோல் சினிமா, டெலிவிஷன் மற்றும் இதர படங்களுக்காக எழுதப்பட்ட சிறந்த பாடல் என்ற பிரிவுக்கும் ஸ்லம்டாக் மில்லினர் படத்தின் `ஜெய் ஹோ' பாடல் சிபாரிசு செய்யப்பட்டு இருக்கிறது.

ஏ.ஆர்.ரகுமானின் ஒலிப்பதிவு, இன்குளோரியஸ் பாஸ்டர்ட்ஸ், காடில்லாக் ரெகார்ட்ஸ், ட்ரூ பிளட், டுவிலைட் ஆகிய படங்களுடன் போட்டியிடுகிறது.

No comments:

Post a Comment