தமிழில் முன்னணி நடிகை யாக இருந்த அசின் “கஜினி” ரீமேக் மூலம் இந்திக்கு போனார். அப்படம் உலகமெங்கும் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. ஒரு படத்திலேயே இந்தி பட உலகில் முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
இதையடுத்து சல்மான்கான், அஜய்தேவ்கானுடன் லண்டன் டிரீம்ஸ் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. பெரிய நடிகர்களுடன் ஜோடி சேர்ந்ததால் வசிப்பிடத்தை சென்னையில் இருந்து மும்பைக்கு மாற்றினார். மும்பையிலேயே வீடு வாங்கி தாய், தந்தையுடன் தங்கினார். இந்தி பிரபல நடிகை ஸ்ரீதேவி வசிக்கும் அபார்ட்மெண்டில்தான் அசின் வீடு வாங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் படங்களில் நடிக்க பலர் அழைத்தனர். அசின் மறுத்து விட்டார். இந்திப் படங்களில் மட்டுமே நடிப்பது என்று உறுதியாக இருந்தார்.
இந்த நிலையில் லண்டன் டீரீம்ஸ் படம் கஜினி போல் பெரிதாக பேசப்படவில்லை. பெரிய படவாய்ப்புகளும் வரவில்லை.
இதையடுத்து மீண்டும் தமிழ்படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார். சமீபத்தில் கலைமாமணி விருது பெற சென்னை வந்தபோது விஜய் ஜோடியாக புதுப்படம் ஒன்றில் நடிக்க அவரிடம் பேசி உள் ளனர். ராஜா இப்படத்தை இயக்குகிறார். ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிக்கிறது. கதை கேட்டு அசின் சம்மதம் சொல்லி விட்டாராம்.
ஏற்கனவே விஜய்யும், அசினும் “சிவகாசி, “போக்கிரி” படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.
ஆஸ்கார் பிலிம்சின் தசாவதாரம் படத்தில் அசின் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Wednesday, December 2, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment