Pages

Wednesday, December 2, 2009

திருமணம் ஆனவரை மணக்கும் நடிகை ?


“கேடி” படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் இலியானா. அப்படத்துக்குப்பின் தமிழ் படவாய்ப்புகள் வராததால் ஆந்திரா பக்கம் ஒதுங்கினார். தெலுங்கில் தற்போது முன்னணி நடிகையாக உள்ளார். சம்பளமும் கோடிக்கு மேல் வாங்குகிறார்.

விக்ரம் நடிக்கும் “24” என்ற புதிய தமிழ் படத்தில் நடிக்க தற்போது ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை விக்ரம்குமார் இயக்குகிறார். இவர் யாவரும் நலம் என்ற பேய் படத்தை டைரக்டு செய்தவர்.

இலியானாவுக்கும், தெலுங்கு டைரக்டர் ஒய்.வி.எஸ். சவுத்திக்கும் காதல் மலர்ந்துள்ளது. சவுத்ரிதான் இலியானாவை தேவதாஸ் என்ற படம் மூலம் தெலுங்கில் அறிமுகப்படுத்தினார். பொது மேடைகளில் இலியானாவை சவுத்ரி பாராட்டி பேசி வருகிறார். ஸ்ரீதேவி, சிம்ரனுக்கு இணையானவர் என்று புகழ்கிறார்.

இலியானாவும் தன்னை சினிமாவில முதன் முதலாக அழகாக காட்டியவர் இயக்குனர் சவுத்ரி என்கிறார். அவரால்தான் இந்த அளவு உயர முடிந்தது என்கிறார்.

இருவரும் உணர்ச்சிபூர்வமாக ஈர்ப்பாகி இருக்கிறார்கள். ஏற்கனவே ஒரு பேட்டியில் பெற்றோர் பார்க்கும் திருமணத்தை விட காதல் திருமணம்தான் உயர்ந்தது என்று இலியானாவே கூறி இருந்தார்.

சவுத்ரியை மனதில் வைத்துதான் அப்படி சொன்னார் என்கின்றனர். இருவரும் ரகசியமாகவும் சந்திக்கிறார்களாம்.

சவுத்ரி ஏற்கனவே திருமணம் ஆனவர். அவருக்கு ஒரு மகள் இருக்கிறார்.

No comments:

Post a Comment