Pages

Saturday, December 5, 2009

திருட்டு வீடியோ ?

திருட்டு வீடியோ புழக்கத்தை தடுக்க உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். திரைப்படத்துறை பாதிக்கப்படாமல் இருக்க, கடுமையான சட்டத்தை கொண்டு வர, மத்திய அரசு முன்வர வேண்டும்' என, தகவல்தொடர்புத் துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி, கோரிக்கை விடுத்தார்.


தேசிய அளவிலான தகவல்தொடர்பு அமைச்சர்கள் மாநாடு டில்லியில் நடைபெற்றது. விஞ்ஞான் பவனில் நடைபெற்ற இந்த மாநாட்டில், தமிழக அரசு சார்பில், அமைச்சர் பரிதி இளம்வழுதி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:தற்போது நவீன தொழில்நுட்ப யுகம் என்பதால், வெவ்வேறு வடிவங்களில் திருட்டு வீடியோ புழக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதை தற்போதுள்ள சட்டங்கள் மூலம் தடுக்க முடியாத நிலை இருந்து வருகிறது.


மாஸ்டர் பிரின்ட் என்ற மூலாதார "சிடி'யையே வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்து இங்கு புழக்கத்தில் விடுகின்றனர்.இது தவிர இன்டர்நெட்டில் இருந்து டவுண்லோடு செய்து திரைப்படங்களை பதிவு செய்து "சிடி'க்களாக உலாவ விடுகின்றனர். ஹேண்டி கேமரா என்ற எளிய வகையிலான காமரா மூலம் காப்பி செய்தும் "சிடி'க்களாக மாற்றுகின்றனர். மாஸ்டர் பிரின்ட் பதிவை கம்ப்யூட்டர் சிப் மூலம் பதிவு செய்து வேறு இடங்களுக்கு எளிதில் எடுத்துச் சென்று விடுகின்றனர்.


எனவே நவீன தொழில்நுட்பம் ஏற்படுத்தியுள்ள இதுபோன்ற நெருக்கடிகளை சந்திக்க வேண்டுமெனில் புதிய சட்டம் அவசியம்.கேபிள் தொழில் தற்போது மிக வேகமாக வளர்ந்து வருகிறது. நாடு முழுவதும் 20 ஆயிரம் கேபிள் ஆபரேட்டர்கள் இயங்கி வருகின்றனர். இந்த தொழிலையும் சீரமைக்க வேண்டும்.இவ்வாறு அமைச்சர் பரிதி இளம்வழுதி பேசினார்.

No comments:

Post a Comment