பணியாளர்கள் தாங்கள் வேலை செய்யும் அலுவலகத்தில் அதிகாரிகளுக்கு கட்டுப்பட்டு பயந்து நடக்கவேண்டியுள்ளது. தனக்கு கீழ் பணியாற்றும் ஊழியர்களை கட்டுப்படுத்த வேண்டியுள்ளது. மேலும் பணி நெருக்கடிகளையும் சந்திக்கின்றனர். இதனால் அவர்களுக்கு பலவித துன்பங்கள், கவலைகள் உண்டாகின்றன; மனஅழுத்தம் அதிகமாகிறது.
அலுவலகத்தில் இப்படி என்றாலும், விடுமுறை எடுத்து வீட்டில் ஜாலியாக இருக்க நினைத்தாலும் முடியவில்லை. அவர்களுக்கு அங்கும் பலபிரச்னைகள் காத்திருக்கின்றன. பொருளாதார சிக்கல்கள் மனதில் நிழலாடுகின்றன.விடுமுறையில் இருந்தாலும் அவர்களுக்கு அலுவலக ஞாபகம் தான் இருக்கும்.
விடுமுறை எடுத்ததால் வேலை தேங்கி இருக்குமோ; மேலதிகாரி தன்னை வேலையை விட்டு எடுத்து விடுவாரோ என்ற பயம் இருந்து கொண்டு தான் இருக்கும்.இதனால் அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டு; கவலை, சோர்வு, தலைவலி, தசைபிடிப்பு, தூக்க மின்மை மற்றும் வயிற்று உபாதைகள் ஏற்படும்.இவ்வாறு ஆய்வில் தெரியவந்துள்ளது.
No comments:
Post a Comment