"எனக்கு இந்திப் படத்தில் நடிப்பது புதிய அனுபவமாக இருந்தது. படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. அக்ஷய்குமார் சிறந்த உழைப்பாளி. தினமும் காலை 6.30 மணிக்கு விழிக்கிறார். குறிப்பிட்ட நேரத்தில் படப்பிடிப்பு செட்டுக்கு வந்து விடுகிறார். என்னிடம் கலகலப்பாக பேசி பழகுகிறார். அவருக்கு நகைச்சுவை உணர்வு அதிகம். படப்பிடிப்பில் நிறைய பேர் எனக்கு நண்பர்களாகி விட்டனர்.

இப்போது என் முழு கவனமும் “காட்டமீட்டா” இந்தி படத்தில்தான் உள்ளது. சில மாதங்கள் கழித்துதான் எனது அடுத்த படம் பற்றி சிந்திப்பேன். தென்னிந்திய மொழிப்படங்களில் நிச்சயம் எனது பங்கு தொடர்ந்து இருக்கும்" என்றார்.
No comments:
Post a Comment