மும்பை நகருக்குள் கடல் வழியாக புகுந்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பின்னர் நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு முன்னேற் பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் அவ்வப்போது “மார்க் டிரையல்” எனப்படும் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படுகிறது.
தமிழகம் முழுவதும் கடந்த 2 நாட்களாக கடலோர பகுதிகளில் “ஆபரேசன் ரஷ்வுக்” என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை நடந்து வருகிறது. கடலோர காவல் படையின ரும், சென்னை போலீசாரும் இதில் இணைந்து செயல்படுகின்றனர்.
இதில், கடலோர காவல் படையைச் சேர்ந்த சிலர் கடல் வழியாக சென்னைக்குள் புகுந்து தாக்குதல் நடத்த முயல்வது போன்ற நாடகத்தை அரங்கேற்றினர். அவர்களை சென்னை போலீசார் தடுக்க முடிகிறதா? இல்லையா? என்பதே இதன் சிறப்பம்சம்.
அதன்படி சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனின் நேரடி கட்டுப்பாட்டில், இணை கமிஷனர்கள் ஷேசசாயி, ரவிக்குமார், சக்தி வேலு மேற்பார்வையில், துணை போலீஸ் கமிஷனர்கள் பெரியய்யா, மவுரியா, செந்தாமரை கண்ணன், திருஞானம் ஆகியோர் தலைமையில் கடலோரத்தில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. துறைமுகம், நட்சத்திர ஓட்டல்கள், மத்திய அரசு அலுவலகங்கள், தமிழக அரசு அலுவலகங்கள், உள்ளிட்ட ஏராளமான இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
இதில் உச்சக்கட்டமாக பாதுகாப்பு கருதி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வெளியாட்கள் நுழைய தடை விதிக்கப்பட்டது. கமிஷனர் அலுவலக வளாகத்தில் போலீசார் தவிர வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை. புகார் கொடுக்க வந்த பொதுமக்கள் காரணம் தெரியாமல் திருதிருவென விழித்துக்கொண்டு வெளியே நின்றனர்.
பத்திரிக்கையாளர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. ஒருசிலர் போலீசாரோடு வாக்குவாதம் செய்தனர். காவலுக்கு நின்ற பெரும்பாலான போலீசாருக்கு என்ன விபரம் என்றே தெரியவில்லை. 10 மணிக்குப் பிறகு புகார் கொடுக்க வந்தவர்களை மட்டும் சோதனை செய்து உள்ளே அனுப்பினர். சுண்டல் விற்பவர்கள், காபி விற்பவர்கள் போலீஸ் துணையுடன் கமிஷனர் அலுவலகத்தில் வலம் வந்தனர்.
நகர் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தினர். சந்தேகத்திற்கு இடமான நபர்களை பிடித்து விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர். நூற்றுக்கணக் கானோர் பிடிபட்டனர். சம்பந்தப்பட்ட தீவிரவாதி வேடமிட்டவர்கள் பிடிபடாமல் இருந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை 7 மணி அளவில் பைபர் படகு மூலம் துறை முகத்தில் ஊடுருவ முயன்ற, தீவிரவாதிகள் வேடமிட்ட 5 பேர் போலீசில் சிக்கினர். அவர்களை துணை கமிஷனர் பெரியய்யா, உதவி கமிஷனர் மரிய ஜார்ஜ் தலைமையிலான, போலீஸ் படையினர் சுற்றி வளைத்தனர்.
அவர்களிடம் இருந்து துப்பாக்கி மற்றும் டம்மி வெடிகுண்டுகளையும் கைப்பற்றினர். தீவிரவாதிகள் வேடமிட்டு நடத்தவிருந்த சதியை முறியடித்ததை எண்ணி சந்தோசப்பட்டனர்.
இருந்தாலும் இன்று இரவு 12 மணி வரை பாதுகாப்பு ஒத்திகை நீடிக்கும். அதுவரை எத்தனை பேர் வேண்டுமானாலும் தீவிரவாதி போல் வேடமிட்டு வருவார்கள் அவர்கள் அனைவரையும் முன்கூட்டியே தடுத்து பிடிக்க வேண்டும். இல்லை என்றால் பாதுகாப்பு ஒத்தி கையில் குறைபாடு உள்ளது என்று முடிவாகி விடும். எனவே, இந்த பாதுகாப்பு ஒத்திகையில் வெற்றி பெற வேண்டும் என்பதில் போலீசார் முழுக்கவனம் காட்டி வருகின்றனர்.
ஒரு பக்கம் பாதுகாப்பு ஒத்திகை, தீவிரவாதிகள் வேட்டை என்று போலீசார் திருடன்- போலீஸ் விளையாட்டு நடத்தி கொண்டிருந்த அதே சமயம், கிண்டி, வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, கீழ்ப் பாக்கம், பேசின் பிரிட்ஜ், நொளம்பூர் பகுதியில் கொள்ளையர்கள் கைவரிசை ஓங்கியது. தாலி சங்கிலி முதல் வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டர் வரை திருடு போனதாக புகார் எழுந்துள்ளது.
சென்னையில் 150 சம்பவங்களை கடந்து “நாட் அவுட்”டாக சென்று கொண்டிருக்கும் தாலி சங்கிலி பறிப்பு கொள்ளை யர்களை பிடிக்கவும் இது போல் வேட்டை நடத்த வேண்டும் என்று பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
Monday, December 21, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment