பம்மல் திருநீர்மலை ரோட்டில் வசித்து வருபவர் ஜெயசீலன் (வயது 55). இவர் நெடுஞ்சாலை துறையில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடு பட்டுள்ளார். ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் அண்ணாநகரைச் சேர்ந்த ராமலட்சுமி (28) என்ற பெண் வேலை செய்து வந்தார். பி.பி.ஏ. முடித்துள்ள இவரும், ஜெயசீலனும் சேர்ந்து இரும்பு பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனம் செயல்படுவது போல போலியான ஆவணங்களை தயார் செய்தனர்.
தங்களிடம் ரூ.30 லட்சம் மதிப்பிலான இரும்பு பொருட்கள் விற்பனைக்கு உள்ளதாக விளம்பரமும் செய்தனர். இதனை நம்பி விருதுநகரைச் சேர்ந்த இளங் கோவன் என்ற தொழில் அதிபர் இவர்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார். இரும்பு பொருட்களை வாங்குவதற்காக ரூ.30 லட்சம் பணத்தையும் இளங்கோவன் கொடுத்துள்ளார்.
அதன் பின்னரே இருவரும் மோசடி பேர் வழிகள் என்பதும், இவர்கள் கூறியது போல கம்பெனி எதுவும் இல்லை என்பதும் தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து இளங்கோவன் கோட்டூர்புரம் போலீசில் புகார் செய்தார். சைதாப்பேட்டை உதவி கமிஷனர் அதிவீரபாண்டியன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி மோசடியில் ஈடுபட்ட ஜெயசீலன், ராமலட்சுமி இருவரையும் கைது செய்தனர்.
Wednesday, December 2, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment