Pages

Wednesday, December 2, 2009

கரீனா கபூர் சம்பளம் ரூ.10 கோடி

இந்திநடிகை கரீனாகபூர் சம்பளம் ரூ.10 கோடியாக உயர்ந்துள்ளது.

இதற்கு முன் இவ்வளவு பெருந் தொகையை சம்பளமாக எந்த நடிகையும் பெற வில்லை. ஐஸ்வர்யாராயே ரூ.6 கோடிதான் சம்பளம் வாங்குகிறார்.

கரீனாகபூர் இவ்வளவு சம்பளம் வாங்குவதை பார்த்து சக நடிகைகள் வாய் பிளந்து நிற்கின்றனர்.

கரீனாகபூர் சினிமாவில் அறிமுகமான போது அவரது சம்பளம் சில லட்சங்கள்தான் இருந்தது. ஜப்விமெட் படத்துக்கு லட்சக்கணக்கில் வாங்கினார்.

அப்படத்தின் வெற்றிக்கு பின் சம்பளம் கோடிகளானது. “ஹம் பத்இங்க்” படத்துக்கு ரூ.2 1/2 கோடி வாங்கினார். “கோல்மால்-2” படத்துக்கு ரூ.3 கோடி பெற்றார். தற் போது “கோல்மால் 3” படத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார்.

இந்த படத்துக்கு தான் அவருக்கு ரூ.10 கோடி சம்பளம் பேசப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment