அப்போது தஞ்சை மருத்துவ கல்லூரி அருகே விக்டோரியா காலனி 2-ம் தெருவில் உள்ள ஒரு வீட்டில் போலீசார் சோதனை செய்தனர். அங்கு பாபநாசத்தை சேர்ந்த ராஜம்(35), ராஜஸ்தானை சேர்ந்த அழகி கிரண்(30) ஆகியோரை போலீசார் பிடித்தனர்.
மற்றொரு அறையில் இருந்த செந்தில்(40), அம்மாபேட்டையை சேர்ந்த பிரியா(30), கல்யாணி(29) ஆகியோர் போலீசாரை கண்டதும் தப்பி ஓடிவிட்டனர்.
போலீசார் விசாரணையில் செந்தில், ராஜம் ஆகியோர் வெளி மாநில அழகிகளை வைத்து வீட்டை வாடகைக்கு எடுத்து விபசாரம் செய்து வந்தது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் செந்தில் மற்றும் 2 அழகிகளை போலீசார் தேடிவருகின்றனர்.
விபசார வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வரும் செந்தில் தஞ்சை பெண் இன்ஸ்பெக்டர் ஒருவரின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பெண் இன்ஸ்பெக்டர் கணவரே விபசார தொழில் நடத்தி வந்ததால் தஞ்சையில் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:
Post a Comment