பன்றிகளில் இருந்து பரவும் எச்1 என்1 என்ற வைரஸ் கிருமிகளால் பன்றிக் காய்ச்சல் பரவுவதாக உலகம் முழுவதும் கருதப்பட்டு வருகிறது. இந்நோய்க்கு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான வர்கள் உயிர் இழந்துள்ளனர்.
எனவே, பன்றிகள் மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது. பல நாடுகளில் பன்றிகள் கொல்லப்பட்டன.
தற்போது, மனிதனிடம் இருந்துதான் பன்றிகளுக்கு காய்ச்சல் பரவுகிறது. பன்றிகளிடம் இருந்து அல்ல என்ற புதிய ஆய்வின், மூலம் தெரிய வந்துள்ளது.
இந்த ஆய்வு தாய்லாந்து நாட்டில் காசெர்ட்சார்ட் பல்கலைக்கழகத்தில் உள்ள பண்ணையில் நடத்தப்பட்டது.
இங்கு 135 பேர் பணி புரிகின்றனர். இந்த நிலையில் அங்கு வளர்க்கப்படும் 80 பன்றிகள் ஆய்வுக்கு எடுத்து கொள்ளப்பட்டன. எந்தவித நோய் தாக்குதலும் இல்லாமல் அவை இருந்தன.
இந்த நிலையில் ஒரு பன்றிக்கு எச்1 என்1 என்ற வைரஸ் பரவி காய்ச்சல் ஏற்பட்டது. இந்த வைரஸ் அங்கு பணிபுரிந்த ஒருவரிடம் இருந்து பன்றிக்கு பரவியிருக் கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இந்த தகவலை தாய்லாந்து மந்திரி தைரா வங்சமுத் தெரிவித்துள்ளார்.
Saturday, December 19, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment