Pages

Saturday, December 19, 2009

நடிப்பின் இமயம் கமல்ஹாசன் - ரஜினி

கமல்ஹாசன் சிறந்த நடிகர் மட்டுமல்லாது, வளர்ந்து வரும் நடிகர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக‌ விளங்குகிறார் என்றும் சுருங்கக்கூறின் நடிப்பின் இமயம் கமல்ஹாசன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். கமல்ஹாசன், திரையுலகிற்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவுற்ற நிலையில், விஜய் டிவி ‘உலக நாயகன் கமல் - ஒரு தொடரும் சரித்திரம்’ எனும் தலைப்பில் கடந்த ஒருமாத காலமாகவே கமல்ஹாசன் குறித்த சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது.இதன்ஒருகட்டமாக சென்னையில இயக்குனர்கள் கே.பாலசந்தர், எஸ்.பி.முத்துராமன், ஏ.வி.எம்.சரவணன், கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட திரைஉலக பிரமுகர்கள் பங்கேற்ற நிகழ்ச்சிக்கு விஜய் டிவி ஏற்பாடு செய்திருந்தது.நிகழ்ச்சியில் பலர் கமல்ஹாசனின் நடிப்புத்திறமையை பாராட்டிப் பேசினர். நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசியதாவது : கே.பாலசந்தர் இயக்கத்தில் நானும், கமல்ஹாசனும் பல படங்களில் இணைந்து நடித்துள்ளதாகவும்,அப்போது பல நேரங்களில் கமலின் நடிப்பைப் பார்த்து தான் வியந்துள்ளதாகவும்,

அவரிடமிருந்து தான் நிறைய கற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார்.அவருடைய நடிப்பை பலவகையில் உன்னிப்பாக கவனிக்கும் வாய்ப்பு பெற்ற நான், பல இடங்களில் தான் அதை முயற்சித்துள்ளதாகவும்,முழு அர்ப்பணிப்புத்திறன் தான்,அவரை புகழின் உச்சாணிக்கொம்பி்ல் ஏற்றி வைத்துள்ளதாக ரஜினிகாந்த் பெருமிதத்துடன் தெரிவித்தார். இயக்குனர் சங்கர்,எந்திரன் படம் இயக்கப்‌போவதாக அறிந்தவுடன், அந்த படத்தில் நடிப்பதற்கு முழுத்தகுதியான ஒரே நடிகர் கமல்ஹாசன் தான் என்று தான் மனதில் தோன்றியதாகவும்,சங்கர் தன்னை அணுகியபோது இதையே வலியுறுத்தியதாகவும் கூறினார். கமல்ஹாசன் தற்போது வசித்துவரும் எல்டாம்ஸ் சாலைக்கு,கமல் சாலை என்று பெயரிடப்பட வேண்டும் திரையுலக பிரமுகர்கள் சார்பில் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

கமலஹாசன் என்ன உலக மஹா தியாகியா ? இல்லை சுதந்திர போராட வீரரா? செக்கிழுத்த செம்மல்லா ? அவர் பெயரை எல்டாம்ஸ் ரோடிற்கு வைக்க வேண்டுமாம்.என்ன கொடுமைடா இது.அடுத்து மனோரமா ஆச்சி தெரு .ரஜினி தெரு.ஸ்ரீப்ரியா தெரு , புவனேஸ்வரி தெரு , சீதா தெரு , தேவயாணி தெரு இப்படி வைத்து கொண்டு போக சிபாரிசு செய்யுங்கள்.நல்ல விளங்கிடும் தமிழ்நாடு ?

- நக்கல் நாகராசன்

3 comments:

  1. This is an idiotic idea. kamalahasan is a good actor. No doubt about this.But the idea is crazy.He is doing business.He his earning money.How come Government and press tolerate this kind of speech and appeal.Stupit appeal.

    ReplyDelete
  2. I hope Government will not fall for their foolish appeal.

    ReplyDelete
  3. what an foolish Idea ? They think all the tamilians are idiots and fools.

    ReplyDelete