விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த தலைவரான கே.பி.,யிடம் நடத்திய விசாரணையில், அவருக்கு சொந்தமாக ஐந்து கப்பல்கள் இருப்பதாகவும், 600க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
இலங்கையில் கடந்த மே மாதம் நடந்த இறுதிக்கட்ட போருக்கு பின், புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அந்த அமைப்பின் புதிய தலைவராக கே.பி., என அழைக்கப்படும் செல்வராசா பத்மநாதன் அறிவிக்கப்பட்டார். கடந்த ஆகஸ்ட் மாதம் வெளிநாடு ஒன்றில் அவர், இலங்கை பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டார்.தற்போது, இலங்கை புலனாய்வு அதிகாரிகள், கே.பி.,யிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து இலங்கை மூத்த அமைச்சர்களில் ஒருவரான கெகலியா ரம்புக்வெல்லா கூறியதாவது:கே.பி.,யிடம் நடத்திய விசாரணையில் பல முக்கிய தகவல்கள் தெரியவந்துள்ளன. அவருக்கு சொந்தமாக ஐந்து கப்பல்கள் உள்ளது தெரியவந்துள்ளது. இவற்றில் மூன்று கப்பல்களை கைப்பற்றுவதற்கு முயற்சிகள் நடந்து வருகின்றன. மேலும், அவருக்கு 600க்கும் மேற்பட்ட ரகசிய வங்கிக் கணக்குள் உள்ளன. அவற்றை முடக்கி வைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. கே.பி.,க்கு சொந்தமாக உள்ள சொத்துக்களை, அரசுக்கு சொந்தமாக்கும் வகையில் மாற்றுவதற்கான வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து அட்டார்னி ஜெனரலுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு ரம்புக்வெல்லா கூறினார்.
Wednesday, December 2, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment