Pages

Sunday, December 6, 2009

காடுகள் அழிகிறதே மந்திரி வருத்தம் >

இந்தியாவில் இயற்கை காடுகளின் பரப்பளவு படிப்படியாக குறைந்து வருகிறது. காடு வளங்கள் அழிவதை தடுக்க கண்காணிப்பை கடுமையாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.காடுகள் வளம் குறித்த ஆய்வு, இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை மத்திய அரசு அறிக்கை தயாரிக்கிறது. 2005 முதல் 2007ம் ஆண்டு வரை காடுகள் வளம் குறித்த அறிக்கையை மத்திய சுற்றுச் சூழல் மற்றும் காடுகள் வள அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் சமீபத்தில் வெளியிட்டார்.


இந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது;இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் காடுகள் 21 சதவீத பங்கு வகிக்கிறது. மழை வளத்துக்கு பயன்படும் மரங்கள் மொத்த பரப்பில் 3 சதவீதம் தான் உள்ளன. ஆக, காடுகள் 24.84 சதவீத மொத்தம் பரப்பில் தான் உள்ளன.நாட்டின் பரப்பில் 33 சதவீதம் காடுகள் இருக்கவேண்டும் என்ற குறியீட்டு அளவை காட்டிலும் இது குறைவு. அடர்த்தியான காடுகளின் பரப்பு தற்போது 936 சதுர கிலோ மீட்டராகவும், அதிக அடர்த்தியான காடுகளின் பரப்பு 38 சதுர கிலோ மீட்டராகவும் குறைந்துள்ளது.


நாற்பது சதவீத காடுகள் குறைந்த மண் வளம் உடையதாக இருக்கிறது. இந்த மண் வளம் மரங்கள் செழித்து வளர போதுமானதாக இல்லை. விவசாயத்திற்கும் சுரங்கத் தொழிலுக்கும் பெரும்பாலும் காடுகள் அழிக்கப்படுகிறது.நக்சல் ஆதிக்கமும் காடுகள் அழிய முக்கிய காரணமாக இருக்கிறது. நக்சல்கள் காடுகளில் ஆதிக்கம் செலுத்துவதால் காடுகளை பராமரிக்க முடியாமல் போகிறது. சட்டீஸ்கர் மாநிலத்தில் 59 சதவீத காடுகள் இந்த பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. தொழிற் சாலை புகை மற்றும் வாகன புகையால் ஏற்படும் சுற்றுச் சூழல் மாசு காடுகளால் 11 சதவீதம் குறைகிறது.

No comments:

Post a Comment