இந்நிலையில், பால் ஹார்வியின் முன்னாள் மனைவி மூலம் பிறந்த பெண்ணிற்கு, பராமரிப்பு தொகை வழங்குவது தொடர்பாக, இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. சண்டை முற்றிய நிலையில், பால் ஹார்வி, "டிவி' ரிமோட் கன்ட்ரோலை, குளோரியாவின் தலையில் எறிந்தார். இதனால், குளோரியாவின் மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு, அவர், இறந்தார். இது தொடர்பாக, கடந்த மார்ச் மாதம், பால் ஹார்வி தன் குற்றத்தை ஒப்புக் கொண்டார்.
இந்த வழக்கில், ஹார்வியின் சார்பில் வாதாடிய வக்கீல் ஜோனாதன் கோல்ட்பெர்க் கூறுகையில், "குளோரியா இருந்த திசையில், ரிமோட் கன்ட்ரோலை வீசிய தவறை மட்டுமே, பால் ஹார்வி செய்துள்ளார். ஆனால், எதிர்பாராத விதமாக, அது குளோரியாவின் பலவீனமான ரத்தக் குழாயில் பட்டு, அவரது இறப்பிற்கு காரணமாகி விட்டது. பால் ஹார்வி, அவரது மனைவியை மிகவும் நேசிக்கிறார். அவர், தன் தவறால் மனைவி இறந்தது குறித்து, தற்போதும் வருந்துகிறார் " என்றார்.
பின், நீதிபதி கில்ஸ் பாரஸ்டர் கூறிய தீர்ப்பு " மனைவியை நோக்கி, ரிமோட் கன்ட்ரோல் போன்ற கடினமான பொருளை வீசியெறிவது, பொறுப்பற்றது மற்றும் அபாயகரமானது. ஹார்வியின் மனநிலையில் பிரச்னை உள்ளது. மது மற்றும் போதை பொருள் சாப்பிட்டதால், அவரின் கோபம் அதிகரித்து, அதை மனைவி மீது காட்டி உள்ளார். இது கோபத்தால் விளைந்த வன்முறை என்பதில் சந்தேகமில்லை. எனவே, ஹார்விக்கு மூன்றாண்டு சிறை தண்டனை விதிக்கப்படுகிறது " இவ்வாறு நீதிபதி கூறினார்.
No comments:
Post a Comment