
மனஅழுத்தத்தை குறைக்க கொடுக்கப்படும் மருந்துகளால், சில பண்பு மாற்றங்களும் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து, இல்லினாய்சில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தை சேர்ந்த சைக்காலஜி பேராசிரியர் டோனி டாங்க் " மனஅழுத்தம் ஏற்படுவதை தவிர்க்க, கொடுக்கப்படும் மருந்துகள், அவற்றிற்கு காரணமான சில குணநலன்களை சரி செய்வதன் மூலம் வேலை செய்கின்றன என்பது, எங்கள் ஆய்வில் தெரியவந்துள்ளது.
நரம்பு பிரச்னைகள் உடையவர்களுக்கு எதிர்மறை உணர்வுகள் ஏற்படுகின்றன. அவர்கள் பெரும்பாலும், நாள் முழுவதும் மனநிம்மதியின்றி காணப்படுவர். நரம்பு சம்பந்தமான பிரச்னை இருப்பவர்களே, பெரியளவில் மனஅழுத்தத்தால் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. சமூகத்தில் மற்றும் வாழ்க்கையின் மீது ஈடுபாடு கொண்டவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைவு.இந்த இரண்டு வகை குணநலன்களும், மூளையில் காணப்படும் "செரோட்டோனின்' என்ற ரசாயனத்தின் அளவால் பாதிக்கப்படும். எனவே, 120 பேரை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு மனஅழுத்தத்தை குறைக்கும் மருந்துகள் வழங்கினோம். 60 பேருக்கு வேறு வகையான சிகிச்சை அளிக்கப்பட்டது.
மற்றொரு 60 பேருக்கு,"பிளேஸ்போ' அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு முன் மற்றும் பின், அவர்களின் குணநலன்கள் மற்றும் மனஅழுத்த அறிகுறிகள் ஆகியவை குறிக்கப்பட்டன.12 வாரங்களுக்கு பின், நோயாளிகள் அனைவரிடமும், நல்ல முன்னேற்றம் தென்பட்டன. மனஅழுத்தத்திற்கான மருந்து சாப்பிட்டவர்களில், பலருக்கு நரம்பு பிரச்னைகள் பெரியளவில் குறைந்திருந்தன. மற்ற குழுவினரை விட, இவர்களின் எண்ணங்கள் மற்றும் வாழ்க்கையில் ஈடுபாடு அதிகரித்திருந்தது " என்றார் .
No comments:
Post a Comment