
முதல் நாள் படப்பிடிப்பில் முழுக்க முழுக்க வட இந்தியப் பெண் போன்ற கெட்டப்பில் வந்த த்ரிஷா, எடுத்த எடுப்பிலேயே சுத்தமாக இந்தியை உச்சரித்தாராம். அதற்கு முன்பு வரை 'ஒரு வார்த்தை கூட இந்தி பேசமாட்டேன், ஆங்கிலத்திலேயே பேசிக் கொள்கிறேன்' என்றுதான் கூறி வந்தாராம் ப்ரியதர்ஷனிடம். ஆனால் அக்ஷயின் நிபந்தனையைக் கேட்டவுடன் சில தினங்களில் தனது பழைய இந்திப் பாடங்களை நினைவுக்குக் கொண்டு வந்து தெளிவாகிவிட்டாராம் அம்மணி (பள்ளியில் இந்திதான் இரண்டாவது மொழியாம். தமிழ் தெரியவே தெரியாது என்று பெருமையாக கற்பூரம் அடிப்பவர் த்ரிஷா!).
த்ரிஷாவின் இந்த திறமையைப் பார்த்து வியந்த அக்ஷய், 'யே பகுத் அச்சீ லட்கி ஹை' என்று பாராட்ட, இந்திக்காரர்களிடம் விருது வாங்கிய மாதிரி மிதந்தாராம் த்ரிஷா!. த்ரிஷாவுக்கு இது முதல் இந்திப் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment